சென்னை: இண்டியா கூட்டணியில் இணைந்த நிதீஷ் குமார் தி.மு.க.வினர் போல் பேசுகிறார் என அண்ணாமலை கூறினார்.
பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து பேசியது தொடர்பாக தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: இதை நாங்கள் கண்டிக்கிறோம். நிதீஷ் குமாரைப் போன்ற மூத்த தலைவர் ஒருவர் எங்கள் தாய் மற்றும் சகோதரிகளைப் பற்றி மிகவும் ஆபாசமாகப் பேசியுள்ளார்.
இண்டியா கூட்டணியில் இணைந்த நிதீஷ் குமார் தி.மு.க.வினர் போல் துரதிர்ஷ்டவசமாக பேசுகிறார். தி.மு.க., வினர் பொதுவாக அநாகரீக வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பரோட்டா போட்ட அண்ணாமலை
திருச்சியில் நடைப்பயணத்தின் போது தனியார் ஹோட்டல் ஒன்றில் அண்ணாமலை பரோட்டா போட்டார். இது தொடர்பாக புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

