Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நச்சாக மாறிவரும் தில்லிக் காற்று – நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 5, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நச்சாக மாறிவரும் தில்லிக் காற்று – நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
20231104283L

மாசுபட்டக் காற்றால் சூழப்பட்டுள்ள தில்லி

தலைநகரில் காற்றில் ஏற்பட்டுவரும் வரும் மிக மோசமான மாசுபாட்டின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காற்று மாசு காரணமாக நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க உத்தரவிட்டிருந்தார்.

 6 முதல் 12 வகுப்புகளுக்கு இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தில்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி  தெரிவித்துள்ளார்.

தில்லியில் தொடர்ந்து ஆறாவது நாளாக நச்சுப்புகை மூட்டம் நீடித்துவருகிறது. காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதற்கு இரவில் நிலவும் மிதமான காற்றோட்டமும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

 தில்லி, மாசுக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், காற்றின் தரம் 450 புள்ளிகளைத் தாண்டினால், அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருந்தது. இப்போது காற்றின் தரம் 460 புள்ளிகளைத் தொட்டுள்ளதால், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், கட்டுமானப்பணிகள் என காற்றை மேலும் மாசுபடுத்தக்கூடிய அனைத்து காரணிகளையும் நிறுத்தும் அவசரகால பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

சுவாச மண்டலத்திற்குள் ஆழமாகச் சென்று உடல்நலப் பிரெச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய மிக நுண்ணிய துகள்கள், தில்லியின் மாசுபட்டக் காற்றில் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அரசால் பரிந்துரைக்கப்பட்ட நுண்துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் ஆகும். ஆனால் இந்த துகள்கள் தில்லியின் பல இடங்களில் 7 முதல் 8 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் ஒரு கனமீட்டருக்கு வெறும் 5 மைக்ரோகிராம் மட்டுமே இந்த நுண்ணிய துகள்கள் இருக்கலாம் என பரிந்துரைக்கிறது. அதன்படி பார்த்தால் தில்லியின் மாசுபட்டக் காற்றில் 80 முதல் 100 விழுக்காடு அதிகமாக இந்த துகள்கள் காணப்படுகின்றன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைப்படி காற்றின் தரமானது 100 புள்ளிகளுக்குள் இருப்பதே நல்லது. இப்போது தில்லியின் காற்றின் தரம் 460 புள்ளிகளை எட்டியுள்ளது.

இந்த தொடர் மாசுபாட்டிற்கு தில்லியின் வெப்பநிலை படிப்படியாக குறைந்துவருவதும், மிதமான காற்றோட்டமும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் வைக்கோல்களை எரிப்பது அதிகரித்திருப்பதுவுமே காரணமாக கூறப்படுகின்றன.

.

Previous Post

பொய் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரஸ்: அனுராக் தாக்கூர் தாக்கு

Next Post

உயர் அதிகாரியை போட்டு தள்ளிய மணல் மாபியா..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உயர் அதிகாரியை போட்டு தள்ளிய மணல் மாபியா..!

உயர் அதிகாரியை போட்டு தள்ளிய மணல் மாபியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In