இந்திய கடற்படையின் சேடக் ஹெலிகாப்டர் ஒன்று நவம்பர் 4 ஆம் தேதி கொச்சி அருகே உள்ள வில்லிங்டன் தீவில் உள்ள கடற்படை விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த விமானி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் கருடாவில் இருந்து ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

