Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவதா? – அண்ணாமலை காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவதா? - அண்ணாமலை காட்டம்
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: “மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றுகூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருமை மிகுந்த தமிழகம் இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் தனது பொலிவை இழந்து நிற்கிறது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதில் ஒன்றுதான், தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றுகூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

.

Tags: அணணமலஉரவனகடடமகணடடவதசயததமழகமதனதததனததகபயரமறறமவடடவடட
Previous Post

ஆளுனருக்கே சம்மன் அனுப்பிய துணை ஆட்சியர் – நொடியில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம்.

Next Post

இலவச வேட்டி, சேலைக்குப் பதிலான நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்: விடுதலை நாளில் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இலவச வேட்டி, சேலைக்குப் பதிலான நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்: விடுதலை நாளில் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

இலவச வேட்டி, சேலைக்குப் பதிலான நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்: விடுதலை நாளில் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    எப்பொழுதும் அரசியல் மட்டுமே அதாவது திமுகவினரை மட்டுமே குறை சொல்லும் இந்த அண்ணாமலை அரசு அதிகாரிகளை பற்றி வாயே திறக்க மாட்டார் ஏனென்றால் இவரும் அரசு அதிகாரியாக இருந்துவிட்டு வந்தவர் தான் அரசியல்வாதிகளாவது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு அரசு அதிகாரிகள் மிகவும் மட்டமாகவும் கேவலமாகவும் நடந்து வருகிறார்கள் இவர்களை தட்டிக் கேட்க எந்த ஒரு எதிர்க்கட்சியும் இல்ல எந்த ஒரு அமைப்பும் கிடையாது பத்திரிகையாளர்களும் பொதுமக்களுமே இதை செய்து வருகின்றனர் எதிர்க்கட்சிகள் செய்தால் பத்திரிகையாளர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In