Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

608 கோடி ஒதுக்கிய மாநிலத்தில் 0 பதக்கம்..33 கோடி ஒதுக்கிய மாநிலத்தில் 22 பதக்கம்.. வஞ்சிக்கும் மத்திய அரசு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
608 கோடி ஒதுக்கிய மாநிலத்தில் 0 பதக்கம்..33 கோடி ஒதுக்கிய மாநிலத்தில் 22 பதக்கம்.. வஞ்சிக்கும் மத்திய அரசு..!
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: இந்திய மாநிலங்களிலேயே குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களைவிட இரு மடங்காக குஜராத் மாநிலத்துக்கு மத்திய அரசு விளையாட்டுத் துறைக்கு கொடுத்த நிதி ரூ608 கோடி. ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குஜராத் மாநிலம் ஒரு பதக்கத்தை கூட வாங்கவில்லை என்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை சரித்திரம் பேசும் வகையில் மிகச் சிறப்பாக நடத்தியது. மிகவும் குறுகிய காலத்திலேயே மத்திய அரசின் வெறும் ரூ33 கோடி நிதி உதவியை வைத்துக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை உலகம் புகழும் வகையில் அசால்ட்டாக நடத்தியது தமிழ்நாடு அரசு.

அப்போது மாநிலங்களுக்கான மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. அத்துடன் இந்தியாவிலேயே பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசானது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதியை வாரி வாரி கொடுத்ததும் அம்பலமானது.

குஜராத்துக்கு தாராளம்: உதாரணமாக குஜராத் மாநில அரசுக்கு ரூ608 கோடி நிதியை மத்திய அரசு கொடுத்தது. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ503 கோடி கொடுத்தது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ183 கோடி கொடுத்தது. இன்னொரு வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமுக்கு கூட ரூ47.68 கோடி கொடுத்தது மத்திய அரசு.

https://twitter.com/Politics_2022_/status/1711988770873209196

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: ஆனால் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ33 கோடியைத்தான் மத்திய அரசு கொடுத்தது. மிசோரம் மாநிலத்துக்கு ரூ39 கோடி; நாகாலாந்து மாநிலத்துக்கு ரூ45 கோடி கொடுத்தது. இந்த குட்டி மாநிலங்களைவிட சொற்ப தொகையைத்தான் தமிழ்நாட்டு கொடுத்தது மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு கொடுத்த ரூ33 கோடி எங்கே? குஜராத்துக்கும் உ.பி.க்கும் கொடுத்த ரூ608, ரூ503 கோடி எங்கே? என்பதுதான் அப்போது எழுப்பப்பட்ட கேள்வி.

சாதித்த பாரத வீரர்கள்: இந்த விவகாரம் இப்போது மீண்டும் கிளம்பியுள்ளது. அதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனையை நமது இந்தியா படைத்துள்ளது. முதல் முறையாக 107 பதக்கங்களை நமது இந்திய வீரர்கள் அள்ளிக் குவித்தனர். இது ஒரு இந்தியராக நமக்குப் பெருமைதான். அதில் துளியும் சந்தேகம் இல்லை.

ஹரியானா, தமிழ்நாடு நிதியும் பதக்கங்களும்: அதேநேரத்தில் மத்திய பாஜக கொட்டி கொட்டி கொடுத்த மாநிலங்கள், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தலான சாதனைகளை படைத்துள்ளனவா? ஹரியானா மாநிலம்தான் அதிகமாக 44 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் ஹரியானா மாநிலத்துக்கு மத்திய பாஜக அரசு கொடுத்த நிதி ரூ88.89 கோடி. வெறும் ரூ33 கோடி மட்டுமே கொடுத்த தமிழ்நாட்டு வீரர்கள் பெற்ற பதக்கங்கள் எண்ணிக்கை 17.

குஜராத் நிதியும் பதக்க பட்டியலும்: அப்படியானால் இந்தியாவிலேயே மிக மிக அதிக அளவில் தமிழ்நாடு, ஹரியானாவை விட பல மடங்கு நிதி உதவியை மத்திய பாஜக அரசிடம் பெற்ற குஜராத் மாநிலம் அதாவது ரூ608 கோடி நிதி உதவி பெற்ற குஜராத் மாநிலம் எத்தனை பதக்கங்கள் வாங்கி இருக்கிறது தெரியுமா? அதுதான் குஜராத் மாடல் என சரித்திரத்தின் பக்கங்கள் பேசப் போகிறது.. ஆம் குஜராத் மாநில விளையாட்டு வீரர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கத்தின் எண்ணிக்கை பூஜ்யம். ரூ608 கோடி நிதி உதவி பெற்ற குஜராத் மாநிலம் ஒரே ஒரு பத்தக்கத்தை கூட இந்திய தேசத்துக்காக பெற்றுத் தரவில்லை.. அப்படியானால் அந்த நிதி என்ன ஆனது? என்கிற கேள்வியுடன் அனல் பறக்க விவாதிக்கிறது சமூக வலைதளம் சூழ் உலகு!

Previous Post

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு முதல்வர் என்ன பெயர் வைச்சிருக்கார் தெரியுமா ?

Next Post

மூத்த ஊடகவியலாளரின் தந்தையார் மரணம் – அமைச்சர் இரங்கல்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மூத்த ஊடகவியலாளரின் தந்தையார் மரணம் – அமைச்சர் இரங்கல்..!

மூத்த ஊடகவியலாளரின் தந்தையார் மரணம் - அமைச்சர் இரங்கல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In