Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பீகாரைபோல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு : அசோக் கெலாட் உறுதி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பீகாரைபோல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு : அசோக் கெலாட் உறுதி..!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெய்ப்பூர் : நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார்.

ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இந்நிலையில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளை கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. இதில் பிற்படுத்தப்பட்டோர் மட்டும் 63 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று அறிவித்துள்ளார்.

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த மாநிலக்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை அறிவித்தார். அதில் அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் ராய்பூர் அமர்வில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் முறை பற்றி கூறினார். அதன் அடிப்படையில் நாங்கள் ராஜஸ்தானில் கணக்கெடுப்பை மேற்கொள்வோம் என்றார். மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம், எனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும், என்று அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் சாதிவாரியாக நிலைமை என்னவென்று தெரியும், ஏனெனில் நாட்டில் பல்வேறு வேலைகளை செய்யும் பல்வேறு சாதியினர் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Previous Post

ஏன் வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது அரசு? – குழப்பத்தில் திமுக..?

Next Post

வர்ம ஆசான் வற்புறுத்தலின் பேரில் ஹைட்ரஜன் பெராக்ஸசைடு இரசாயனத்தை குடித்ததால் மரணம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வர்ம ஆசான் வற்புறுத்தலின் பேரில் ஹைட்ரஜன் பெராக்ஸசைடு இரசாயனத்தை குடித்ததால் மரணம்?

வர்ம ஆசான் வற்புறுத்தலின் பேரில் ஹைட்ரஜன் பெராக்ஸசைடு இரசாயனத்தை குடித்ததால் மரணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In