Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரசு மருத்துவமனை மரணங்கள் : மகாராஷ்டிர அரசிடம் மும்பை உயர்நீதிமன்றம் காட்டம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் மருந்து இல்லாததால் 39 பேர் உயிரிழப்பு? – சுகாதார மந்திரி பதவி விலக எதிர்கட்சிகள் கோரிக்கை…!
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாந்தேட்டில் உள்ள மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் கடந்த 8 மணி நேரத்தில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இறப்பு எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.

மருந்து, பணியாளர்கள், படுக்கை பற்றாக்குறை மற்றும் தூய்மையின்மையே இந்தியர்களின் உயிரைப் பறிக்கிறது என்பதில் மாற்று கருது இருக்க முடியாது என்பதற்கு மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளின் நிலைமையே சான்றாகும்.

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளின் நிலைமையை, மற்றும் அரசு அதிகாரிகளின் திறமையின்மையை பாம்பே உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அசோக் சவான், விஜய் வெட்டிவர், சுப்ரியா சுலே போன்ற எதிர் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நோயாளிகளை சந்தித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு மகாராஷ்டிர அரசை பம்பாய் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு கேட்டுள்ளது.

மேலும், அதே காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளின் தேவை மற்றும் விநியோகம் குறித்த தகவல்களை நீதிமன்றம் கோரியுள்ளது.

மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் மசோதா, 2023-ன்படி மருந்து கொள்முதல் மற்றும் பணியாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க மருத்துவக் கொள்முதல் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி முதன்மைச் செயலாளரின் பிரமாணப் பத்திரத்தில், கடந்த ஆண்டில் மருத்துவப் பொருட்களுக்காக நாந்தேடுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 97 பேராசிரியர் பணியிடங்களில் 49 பேர் மட்டுமே தற்போது நிரப்பப்பட்டிருக்கிறது. நாந்தேட்டில் உள்ள டாக்டர் சங்கர்ராவ் சவான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பேராசிரியர்கள் பற்றாக்குறை குறித்தும் உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இந்த பணியிடங்கள் நவம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என மகாராஷ்டிர அரசு உறுதி அளித்துள்ளது.

மருத்துவமனையில் மருந்து கொள்முதல் வாரியத்திற்கு முழுநேர, சுயாதீன தலைமை நிர்வாக அதிகாரி இல்லாததை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Previous Post

முரசொலியின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட்டு ஹாக் செய்த ஆசாமி யார்? பணம் கேட்டு மிரட்டல் – கதறும் திமுக தலைமை..!

Next Post

“தமிழகத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி – அமைச்சர் உதயநிதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தமிழகத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி – அமைச்சர் உதயநிதி

“தமிழகத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி - அமைச்சர் உதயநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In