மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குனரகம் (ED) பதிவு செய்த வழக்குகளுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் மனுவை புதன்கிழமை (04.09.2023) உச்சநீதிமன்றம் விசாரித்தது. கூறப்படும் டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் பயனாளி எனக் கூறப்படும் அரசியல் கட்சியை ஏன் குற்றவாளியாக்கவில்லை உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பியது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்குகளில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிசோடியா தாக்கல் செய்த இரண்டு மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இன்று விசாரணை முடிந்ததும் பெஞ்ச் எழுப்பவிருந்த நிலையில், நீதிபதி கன்னா, ED மற்றும் CBI தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூவிடம் கேட்டார். “PMLA-வை பொறுத்த வரையில், உங்கள் முழு வழக்கும் அரசியல் கட்சியையே சார்ந்தது. ஆனால் அந்த அரசியல் கட்சி மேல் இன்னும் ஏன் குற்றம் சாட்டப்படவில்லை?. அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? தனிப்பட்ட முறையில் அவர் பயனாளி அல்ல, அரசியல் கட்சிதான் பலனடந்துள்ளது “. என்று கேள்வி எழுப்பினார்.
