சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் ‘சமவேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன், அமைச்சர் மகேஷ் நேற்று பேச்சு நடத்தினார். எனினும், முதல்வர் தீர்வை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என, அவர்கள் அறிவித்தனர்.
இதேபோல் மற்ற ஆசிரியர் சங்கங்களும் ‘முதல்வர் நல்ல முடிவை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்’ என, அறிவித்துள்ளன.

