அதிமுக – பாரதிய ஜனதா கட்சி இடையிலான கூட்டணி முறிவால் உண்மையிலேயே யாருக்கு பிரச்சனை என்றால் எல்லாருமே மிகச் சுலபமாகப் பதிலளித்துவிடுவார்கள்…பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதை அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
தலைக்கு மேலே தொங்கும் கத்திகளாக ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் இருந்ததாலும் – இருப்பதாலும் அதிமுகவின் தலைவர்கள்தான் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
திமுகவுடன் தோளோடு தோள் நின்ற அரசியல் கட்சிகளும்கூட அணி மாறக் கூடிய சூழல் ஏற்படலாம்.
இப்போது திமுகவுடன் அணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இருக்கின்றன. இவர்கள் 2024 தேர்தலில் கூடுதலாக தொகுதி கேட்பார்களா அதே தொகுதில் நீடிப்பார்களா என்று திமுக குழப்பத்தில் இருக்கிறது. திருமா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடம் கேட்டால் அவர்களை எப்படி சமாளிப்பது என்று மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்கிறாராம் ஸ்டாலின்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பா.ம.க., தமாகா, புதிய தமிழகம், ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் இருக்கின்றன. அணியில் அதிமுக இல்லாவிட்டால் இவற்றில் எவையெல்லாம் தொடர்ந்து இருக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. இருப்பினும் அதிமுக தமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறது. இதில் சீமான் நடிகர் விஜய் உள்ளே கொண்டு வர எடப்பாடி பழனிசாமியும் முயற்சி எடுக்கிறாராம்.
இது ஒரு புரம் இருக்க திமுகவுடன் இணக்கமாகத் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ள முடியாத கட்சிகளும்கூட அதிமுக அணியுடன் சேரலாம். என்றைக்கு பஜகாவும் அதிமுகவும் பிளவு பட்டதோ அன்று முதல் திமுக தலைமை பெரும் குழப்பத்தில் உள்ளதாம். INDIA கூட்டணி மூலம் எப்படியாவது துணை பிரதமர் ஆகிவிடலாம் என்ற கணக்கு போட்டு காய் நகர்த்திய ஸ்டாலின் கனவில் மண்ணள்ளிப்போட்டுள்டார் EPS.
எப்படியென்றாலும் பாரதிய ஜனதா எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட நேரிடும். ஆக, அதிமுக – பா.ஜ.க.வின் உறவு முறிவு, திமுக அணியில் பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தலாம்


கனவு மட்டுமா கலைந்தது தூக்கமே கலைந்தது இனி எல்லாம் சிவராத்திரி தான்
hahahahhahahhaa…………. 🙂
Mks என்றால் ஸ்டாலினா புதிய பெயர் வச்சாச்சா EPS OPS VKS இப்போ MKS நல்ல பெயர் தான் மொத்தத்தில் S தான் நம்மை சுற்றி இருக்கிறது