Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இன்றைக்கும் இல்லை, என்றைக்கும் இல்லை பாஜக கூட்டணி..! – உருவாகிறதா புதிய கூட்டணி..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
இன்றைக்கும் இல்லை, என்றைக்கும் இல்லை பாஜக கூட்டணி..! – உருவாகிறதா புதிய கூட்டணி..?
97
SHARES
157
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: பாஜகவுடன் கூட்டணியை மொத்தமாக முறித்துக்கொண்டு அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கும் பட்சத்தில்.. அந்த கூட்டணியில் யார் எல்லாம் சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி இன்று கிளைமேக்ஸை நெருங்க உள்ளது. ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து பேசி இருந்தார். அவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறிக்கிறது என்று ஜெயக்குமார் அறிவித்தார்.

இதையடுத்து மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், பாஜக உடனான கூட்டணியில் எங்களுக்கு குழப்பம் இல்லை. பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். அதற்கான பணிகளை செய்ய நாங்கள் தயார், அதேபோல் எடப்பாடியை முதல்வராக பாஜக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும், என்று செல்லூர் ராஜு கூறினார்.

அண்ணாமலை பேச்சு: இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் மழுப்பலாக பேசினார். அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான், என்றார்.

அதன்பின் நேற்று ஜெயக்குமார் அளித்த பேட்டியில் மீண்டும், பாஜகவுடன் கூட்டணி இல்லை. எங்கள் கூட்டணி முறிந்துவிட்டது என்பதை அப்போதே அறிவித்துட்டோம், என்று மீண்டும் கூட்டணிக்கு எதிராக பேசி உள்ளார். செல்லூர் ராஜு ஒன்று பேச.. ஜெயக்குமார் வேறு ஒன்று பேச ஒரே குழப்பமாக மாறி உள்ளது.

இந்த நிலையில்தான் இன்று கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார்.. இன்று நடக்கும் கூட்டத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என்று மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூறியதாக தெரியவருகிறது..

இன்றைய கூட்டம் : இன்றைக்கு நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் பாஜக கூட்டணி வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனர். இந்த முடிவில் எடப்பாடியும் உறுதியாக உள்ளார் என்று தெரிய வருகிறது. இத்தகவலால் அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் விரைவில் அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கலாம். பாஜக அல்லாத புதிய கூட்டணியை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.

விசிக: இங்கே இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் மோதல் இல்லை என்றாலும், திமுக இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காது என்கிறார்கள். இந்த லோக்சபா தேர்தலில் கடந்த தேர்தலில் கொடுத்தது போல விசிக, சிபிஎம், சிபிஐக்கு 2 இடங்களை திமுக கொடுக்காது. காங்கிரசுக்கும் 10 இடங்களை கொடுக்காது என்கிறார்கள்.

மாறாக இவர்களுக்கு தலா 1 இடம், காங்கிரஸ் 6-7 இடங்களை கொடுக்கும் திட்டத்தில் திமுக இருக்கிறதாம். இதன் காரணமாக அதிர்ச்சி அடையும் விசிக போன்ற கட்சிகள் சமயங்களில் அதிமுக கூட்டணியில் இணைய திட்டமிடலாம். இத்தனை காலம் பாஜகவுடன் கூட்டணி இருந்ததால் அதிமுக கூட்டணியில் இணைய மறுத்த விசிக, சிபிஎம், சிபிஐ ஆகியவை அதிமுக – பாஜக கூட்டணி முறியும் பட்சத்தில் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன.

Previous Post

முதல்வர், உதயநிதி குறித்து அவதூறு: இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைது; தி.மலை, செய்யாறில் ஆர்ப்பாட்டம்

Next Post

அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை வெளுத்து வாங்கிய மா.செக்கள்…! – பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை வெளுத்து வாங்கிய மா.செக்கள்…! – பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்..!

அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை வெளுத்து வாங்கிய மா.செக்கள்...! - பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு . அரசியல்வாதிகளின் பேச்சு இதைவிட கேவலமானது இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In