Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வீடியோவை பார்த்து கோபப்பட்ட எடப்பாடி.. பயங்கர முடிவு! தமிழ்நாட்டில் முக்கோண மோதல்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வீடியோவை பார்த்து கோபப்பட்ட எடப்பாடி.. பயங்கர முடிவு! தமிழ்நாட்டில் முக்கோண மோதல்..
47
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இன்று எடுக்கும் முடிவு காரணமாக தமிழ்நாட்டில் முக்கோண கூட்டணி மோதல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் பாஜக உடன் கூட்டணி உடைந்தது, பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று அதிமுக அறிவித்தது. அதன்பின் மறுநாளே அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் பேச கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக செய்திகள் வந்தன.

அண்ணாமலை: தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.

இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார். இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வீடியோ: அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக கால் செய்து எடப்பாடியிடம் பேசி உள்ளனர். அதில்.. நீங்கள் தானே பொதுச்செயலாளர் . நீங்கள் தானே மூத்த தலைவர். அவர் என்ன உங்களை பற்றியே இப்படி பேசுகிறார். இதெல்லாம் சரியா. சின்ன பையன் நம்மை கேள்வி கேட்கிறார், மோசமாக பேசுகிறார், என்றுள்ளனர். இதையடுத்து அண்ணாமலையின் வீடியோவை பார்த்து எடப்பாடி பழனிசாமியும் கோபம் அடைந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து எடப்பாடி கோபத்தின் உச்சிக்கே போய் உள்ளார். இதன் பின்பே கூட்டணி முறிவு முடிவை எடுத்துள்ளார்.

அண்ணாமலை மழுப்பல்: இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் மழுப்பலாக பேசினார். அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான். இபிஎஸ்ஸை அடுத்த முதல்வராக்குவோம் என நான் கூற முடியாது. நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உச்சம்: அதிமுக – பாஜக கூட்டணி மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து இறுதிக் கோரிக்கையை எடுப்பதற்காக இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. இதில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என்கிறார்கள். முக்கியமாக பாஜக, காங்கிரஸ் யாருடனமும் கூட்டணி வைக்காமல் நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி போல தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி இருக்கலாம் என்கிறார்கள்.

முக்கோண மோதல்: இதனால் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி, அதிமுக தலைமையிலான இன்னொரு கூட்டணி, திமுக கூட்டணி என்ற முக்கோண மோதல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் திமுக கூட்டணி ஏற்கனவே வலிமையாக இருப்பதால் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக ஆகியவை திமுக கூட்டணியை முறிக்க வாய்ப்புகள் குறைவு. இதனால் திமுக – அதிமுக – பாஜக மும்முனை மோதலால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் வாய்ப்புகள் உள்ளன.

Previous Post

அப்படி போடு! 14 ஆண்டுகளுக்கு பின்.. சென்னைக்கு விடிவு! தொடங்குகிறது மதுரவாயல் – துறைமுகம் பால பணிகள்

Next Post

வார்ரூம் தலைவராக காங்கிரஸ் நியமித்தது யாரை தெரியுமா..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வார்ரூம் தலைவராக காங்கிரஸ் நியமித்தது யாரை தெரியுமா..?

வார்ரூம் தலைவராக காங்கிரஸ் நியமித்தது யாரை தெரியுமா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In