இங்கிலாந்து : லெய்செஸ்டர் தெருக்களில் விநாயகசதுர்த்தியை சாலையில் கொண்டாடி இடையூறு விளைவித்ததற்காகவும், சட்டவிரோதமாக வழி மறித்ததற்காகவும் லண்டன் வாழ் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 19 அன்று, உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடினர், அதே போல் ஐக்கிய இராச்சியத்தின் லீசெஸ்டர் நகரத்தில் வாழும் இந்துக்களும் கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஊரில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் குழு பூசாரி மற்றும் பக்தர்களை தாக்கியதை அடுத்து விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை பிரிட்டனில் வாழும் இந்துக்கள் மற்றும் இந்தியர்களால் தொடங்கப்பட்ட இன்சைட் யுகே என்ற சமூக இயக்கம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவைப் பகிர்ந்த அந்த அமைப்பு, காவல்துறை அதிகாரியின் நடத்தை ஏற்கத்தக்கதா என்று லெய்செஸ்டர் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியது.
பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் இது போன்ற சமய விழாக்கள் மக்களுக்கு இடையுறு ஏற்படும் வகையில் செய்யக்கூடாது என்று காவல் துறை எச்சரித்து இருந்தும் இந்த விழாவை நடத்தியதால் அங்கு போலீஸ் வர நேரிட்டது என்று லெய்செஸ்டர் காவல் துறை தெரிவித்துள்ளது.

