Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சனாதன சர்ச்சை.. உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் - பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் சார்பில் வழக்கறிஞர் ஜி.பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார். அவர் அரசின் பிரதிநிதி, தனிநபர் அல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது சனாதன சர்ச்சை விவகாரததில் தலையிட விரும்ப வில்லை ஏன் உயர் நீதிமன்றத்தை நாடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் சனாதன ஒழிப்பு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார். 

இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பாஜகவினர் எதிர்ப்பு

உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி சனாதனம் குறித்து பேசுபவர்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது.

‘அப்படித்தான் பேசுவேன்’

பாஜகவினரின் கண்டனத்திற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ”ஒட்டுமொத்த இந்தியாவும் சனாதனம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது.

Genocide (இன அழிப்பு) என நான் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படிதான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன். என்றார் 

இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

‘அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ : EPS கண்டனம்!

Next Post

மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

Comments 1

  1. Suriya Narayanan says:
    3 years ago

    GOOD move by supremecourt in this matter

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In