Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நீங்க எப்படிங்க “அப்படி” பேசலாம்.. மாஜியை கூப்பிட்டு திட்டிய EPS..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நீங்க எப்படிங்க “அப்படி” பேசலாம்.. மாஜியை கூப்பிட்டு திட்டிய EPS..!
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருக்கும் மாஜி அமைச்சர் ஒருவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பாஜக மோதல் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மோதல் சப்பென்று முடிந்துள்ளது. இரண்டு தரப்பும் கிட்டத்தட்ட சமாதானமாக இறங்கி போய் உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அதிமுகதான் அண்ணாமலையிடம் இறங்கி போய் உள்ளது.

முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.

இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார். இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திடீர் திருப்பம்: இந்த நிலையில் திடீர் திருப்பமாக கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரிய வெப்பம் சீண்டியது! சந்திராயன் 3 விக்ரம், பிரக்யான் கண் விழித்ததும் என்ன நடக்கும்? ஷாக் பின்னணி கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் பேசக்கூடாது; கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாஜி அமைச்சர் ஒருவர் கூட்டணி குறித்து, பாஜக குறித்தும், மோடி குறித்தும் பேசினார். மோடியை, பாஜகவை புகழ்ந்து பேசியதோடு, கூட்டணி குறித்து பாசிட்டிவ் கருத்து ஒன்றையும் கூறினார்.

ஆனால் இதை எடப்பாடி விரும்பவில்லையாம். கூட்டணி முறிவை வைத்து எடப்பாடி பழனிசாமி சில கணக்கு போட்டுள்ளார். ஆனால் அந்த மாஜி அப்படி பேசியதால் எல்லாம் புஸ் என்று போக எடப்பாடி கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். யாரை கேட்டு அந்த கருத்தை சொன்னீர்கள். அதுதான் கூட்டணி பற்றி பேச கூடாது என்று சொன்னேனே. எப்படி பேசினீர்கள்? என்று அந்த மாஜியை அழைத்து எடப்பாடி திட்டி தீர்த்துள்ளாராம்.

அண்ணாமலை: இதையடுத்து நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான். இபிஎஸ்ஸை அடுத்த முதல்வராக்குவோம் என நான் கூற முடியாது. நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Previous Post

NEET-ல் பூஜ்யம் மார்க் விவகாரம் : 21-ம் நூற்றாண்டின் பைத்தியக்கார அறிவிப்பு..!

Next Post

‘அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ : EPS கண்டனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ : EPS கண்டனம்!

'அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ : EPS கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In