அண்டை வீட்டார் இடையிலான வாய்த்தகராறு முற்றியதில், ஒருவர் மற்றொருவரின் அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
உத்தர பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் ரோஸா நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஞாயிறு இரவு ரோஸா நகரின் அண்டை வீடுகளில் வசிக்கும் இருவர் இடையே வாய்த்தகராறு எழுந்தது. இருவரில் கங்காராம் சிங் என்பவர் பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்.
பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் ஆடுகள் அவ்வப்போது தனது தோட்டத்திலிருக்கும் செடிகளை கடித்து விடுவதாக குறைபட்டு வந்த கங்காராம் சிங், ஞாயிறு இரவு பொறுமை இழந்தார். ஆடு வளர்க்கும் பக்கத்து வீட்டுக்காரரிடம் நீண்ட வாய்த்தகராறில் ஈடுபட்டவர், அதன் உச்சமாக எவரும் கணித்திராத காரியத்தில் ஈடுபட்டார்.

பக்கத்து வீட்டை சேர்ந்த 28 வயது இளைஞரை கீழே தள்ளிய கங்காராம், அந்த இளைஞரின் அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறி வைத்தார். இதனால் வலியில் துடித்த அந்த இளைஞர், ரத்தம் அதிகமாக வெளியேறியதில் மயக்கமடைந்தார். உடனடியாக ஷாஜகான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அந்தரங்க உறுப்பில் தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளித்ததில், இளைஞர் மயக்கத்திலிருந்து மீண்டார். ஆனபோதும் ’கடுமையான வலி தொடர்வதாகவும், இல்லற வாழ்க்கையில் இனியும் ஈடுபட முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும்’ கடிபட்ட இளைஞர் வேதனை தெரிவித்திருக்கிறார். அவர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, ரோஸா நகர் போலீஸார் பக்கத்து வீட்டுக்காரர் அந்தரங்க உறுப்பில் கடித்துக் குதறிய கங்காராம் சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இவனுக்கு கடிக்கிறதுக்கு வேற இடமே கிடைக்கலையா எங்கே போய் கடிச்சிருக்கான் இவன் ஆண் மகனா இருக்க மாட்டான் அரவணியாக இருப்பான்.