
சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டு பிள்ளை’, விஷாலின் ’துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் அனு இம்மானுவேல். அவர் தற்போது, கார்த்தியின் ’ஜப்பான்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போதைய தமிழ் சினிமா நிலவரம் குறித்த பேட்டியின் போது, நடிகை அனு இம்மானுவேல், தானும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையை சந்தித்ததாக பேட்டியில் கூறி இருக்கிறார். அதில், ‘’ நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பலர் என்னிடம் தவறாக அணுகினார்கள். தற்போது கூட பிரபல தயாரிப்பாளர் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டார்.

பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வரும்படி வெளிப்படையாகவே கேட்டார்கள். நான் எனது குடும்பத்தினரின் உதவியுடன் தான் இதை எல்லாம் சமாளித்தேன்.
பெண்களை இப்படி வளரவிடாமல் தடுக்கும் நபர்களைப் பார்த்து பயப்படாமல் முன்னேறி வர வேண்டும்” என்று அனு இம்மானுவேல் கூறியுள்ளார். அனு இம்மான்னுவேலின் இந்த பேட்டி தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

