டிசம்பரில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி வாக்கில், மக்களவைத் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வாய்ப்பளிக்காத வகையில், ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் முன்கூட்டியே பாஜகவினர் ’புக்’ செய்துள்ளனர்.
மாநில ஆளுநர் சி.சி.ஆனந்த போஸ், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு எதிராக சவால் விடுகிறார். பாஜக மற்றும் ஏபிவிபியை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் சட்ட விரோத செயல்களை ஊக்குவிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது, ஒன்று மட்டுமே! இது உத்தரபிரதேசம் அல்ல… மேற்கு வங்கம்!” என்று மம்தா பானர்ஜி சீறினார்.

