கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வெற்றி முகமாக திமுகவை வழி நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
தேர்தல் வெற்றிகளைத் தாண்டி அரசியல் களத்திலும் திமுக தலைவராக ஸ்டாலினுக்கு கடந்த 5 ஆண்டுகளும் ஏறுமுகம் தான். நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை, இந்தி கட்டாயம் உள்ளிட்ட பாஜகவின் பல திட்டங்களை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை, நீட் தேர்வு ரத்து ரகசியம் என எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானாலும், பாஜகவிற்கு எதிராக ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கியதில் அளப்பறிய பங்கற்றி தேசிய அரசியலும் தடம் பதித்துள்ளார் ஸ்டாலின்.

திமுக தலைவராக 6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

