
பெரம்பலூர் ரோட்டரி கிளப், PDNP+( நெட்ஒர்க் ) இணைந்து நடத்தும் விழா, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ரெட்டியார் ஹாலில் இன்று காலை நடைபெற்றது.
இவ்விழாவில் HIV பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கல்வி பெட்டகம் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்த The Human Life Foundation, chennai நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் தலைவர் Rtn.s. சுரேஷ் கிருஷ்ணா ,செயலாளர் Rtn .அருணகிரிநாதன் ,பொருளாளர் Rtnதியாகராஜன் மற்றும்
முன்னாள் உதவி ஆளுநர் Rtn. K. N. ஜெயராமன், முன்னாள் தலைவர் rtn. தன்ராஜ், முன்னாள் தலைவர் Rtn. அம்பி,
முன்னாள் தலைவர் Rtn. பிரகாஷ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏழை எளிய பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்டத்தை பெற்று கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

