அதிமுக வலிமையான கட்சி தான். ஆனால் அது இருக்கும் இடம் தான் தவறானது என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ’’தமிழகத்தில் அதிமுக வலிமையான கட்சி என்பதை மதுரை மாநாட்டின் மூலம் நிருபித்துள்ளனர். ஆனால் அவர்கள் பாஜகவுடன் இருக்கும் வரை இங்கு வெற்றி பெற வாய்ப்பில்லை.
நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசுகளால் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதும், அதற்கு நிதி ஒதுக்கி அதிகாரிகளை மாநில அரசு நியமிக்கும் போது அங்கு படிப்பதற்கு மட்டும் மாணவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது கூட்டாட்சிக்கு எதிரானது. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து மாநில முதல்வர்களையும் சென்னைக்கு அழைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.


கார்த்திக் சிதம்பரம் எந்த கூட்டணியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே அல்லது மறந்து விட்டாரா