ஷிவமொக்கா : கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஹோலேஹொன்னூரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த நாசவேலை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சிலை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தின் பிரதான சந்திப்பில் நிறுவப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலீசார் தெரிவித்தனர்.

