Wednesday, November 25, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பாஜக – அகாலி தளம்..  மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2026
in அரசியல் செய்திகள்
0
6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பாஜக – அகாலி தளம்..  மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 24, 2026 6:19 PM IST

தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாஜக தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

News18
News18

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பஞ்சாப் அரசியலில் மிக முக்கியத் திருப்பமாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் சிரோமணி அகாலி தளம் (SAD) ஆகிய கட்சிகள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.

ஸ்ரீ குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாள் (பிரகாஷ் புரப்) கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) மிகப் பழமையான கூட்டணிக் கட்சியான அகாலி தளம் மீண்டும் இணைந்திருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (X) தளத்தில் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மக்களின் நலனே தங்களுக்கு முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தங்களது கூட்டணி ஒரு ‘இயற்கையான கூட்டணி’ என்றும், மக்கள் நலன் சார்ந்த ஆட்சியின் மூலம் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி மற்றும் சர்தார் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணி, காலத்தால் அழியாதது எனவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோருடன் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாபின் மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் என அறிவித்தார்.

இந்தக் கூட்டணியில் தேர்தலில் வெற்றி பெற்றால் முதலமைச்சர் பதவி அகாலி தளத்திற்கே வழங்கப்படும் என்றும் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 24 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அகாலி தளம் வெளியேறியது.

தற்போது அந்தச் சட்டங்களே ரத்து செய்யப்பட்டுவிட்டதால், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என அமித் ஷா விளக்கமளித்தார். தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாஜக தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.



.

Previous Post

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: ” ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?”- சீமான் | seeman about kallakurichi mla arul vignesh issue

Next Post

வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்… பதற்றம்… போர்க்களமான திருப்பரங்குன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்… பதற்றம்… போர்க்களமான திருப்பரங்குன்றம்

வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்... பதற்றம்... போர்க்களமான திருப்பரங்குன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In