Wednesday, November 25, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்… பதற்றம்… போர்க்களமான திருப்பரங்குன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2026
in அரசியல் செய்திகள்
0
வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்… பதற்றம்… போர்க்களமான திருப்பரங்குன்றம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செய்து தர வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 9 மணி முதல் 25 ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கபட்டனர். ஆனாலும் திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமெனக் கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனிடையே திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் போடப்பட்ட 144 தடை உத்தரவை நீக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, “உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

மாலை 6 மணியளவில் வழக்கமாக தீபம் ஏற்றபடும் இடமான உச்சிபிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தூணிலும் தீபம் ஏற்றபடும் என ஆவலோடு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்போது பக்கத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்காக பாடல் வழக்கமாக ஒலிக்கப்பட்டது. உடனே அங்கு குழுமியிருந்தவர்கள் ‘பார்த் மாதாகி ஜே’ எனக் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து  நீண்ட நேரமாகியும் தூணில் தீபம் ஏற்றப்படாததால் கோபமடைந்தவர்கள் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் வழியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பேருந்து மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

திருப்பரங்குன்றம் தூண்: “மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல” – நீதிபதி



.

Previous Post

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பாஜக – அகாலி தளம்..  மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

TVK MLA Arul Vignesh-ஐ காப்பாற்ற முயன்றாரா Vijay? | Kallakurichi Collector | Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK MLA Arul Vignesh-ஐ காப்பாற்ற முயன்றாரா Vijay? | Kallakurichi Collector | Imperfect Show

TVK MLA Arul Vignesh-ஐ காப்பாற்ற முயன்றாரா Vijay? | Kallakurichi Collector | Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In