Monday, November 23, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உ.பி. தேர்தல்; சமாஜ்வாதி – காங்கிரஸ் தொகுதி பங்கீடு; முதற்கட்ட பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2026
in அரசியல் செய்திகள்
0
உ.பி. தேர்தல்; சமாஜ்வாதி – காங்கிரஸ் தொகுதி பங்கீடு; முதற்கட்ட பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 23, 2026 6:06 PM IST

உத்தரப்பிரதேசத்தில் 2027 தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையேயான அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி (கோப்புப் படம்)
அகிலேஷ் யாதவ் – ராகுல் காந்தி (கோப்புப் படம்)

உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஆளும் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், காங்கிரஸ் அதிக தொகுதிகளை கோருவதாகவும் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இன்று சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 12.20க்கு நிறைவடைந்தது. சுமார் 20 நிமிடங்கள் இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து CNN-News18 ஊடகத்திடம் பேசிய, கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சி வட்டாரங்களின் தகவல்படி, தொகுதிகளின் எண்ணிக்கையை தாண்டி முக்கியத் தொகுதிகள் குறித்தான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

முன்னதாக, இரு கட்சிகளும் தங்கள் பேச்சுவார்த்தை உத்திகளை ஒருங்கமைப்பதற்காகத் தனித்தனியாக ஆலோசனைகளை மேற்கொண்டன. இதன் பிறகே இரு கட்சிகளும் கலந்தாலோசனையில் ஈடுபட்டது.

தொகுதிகள் வாரியான தகவல்களை நடைமுறைக்கு ஏற்ற வகையில் பரிமாறிக்கொள்ள இரு தரப்பு குழுக்களும் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் வட்டாரங்களின்படி, விவாதத்தில் இருந்த தொகுதிகள் குறித்து, வரலாற்று ரீதியான வாக்கு விகிதங்கள், சாதி சார்ந்த கணக்கீடுகள் மற்றும் உள்ளூர் அமைப்பு ரீதியான பலம் போன்ற, வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் அடங்கிய தரவுகளை இரு தரப்பினரும் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற நல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் சில குறிப்பிட்ட தொகுதிகள் குறித்த தரவுகளையும் சமாஜ்வாதி கட்சி முன்வைத்தது.

“இந்தக் கூட்டம் சுமூகமாகவும் நேர்மறையாகவும் அமைந்தது. எந்தெந்தத் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டுமோ, அவை தொடர்பான தரவுகளை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டனர்… இப்போது இரு தரப்பினரும் பரிமாறிக்கொள்ளப்பட்ட தரவுகளை ஆய்வு செய்துவிட்டு, நாளை அதே நேரத்தில் மீண்டும் சந்திப்பார்கள்” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு மூத்த தலைவர் சிஎன்என்-நியூஸ்18 (CNN-News18) ஊடகத்திடம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய யாதவ், “இந்தக் கூட்டம் மிகவும் சுமுகமான சூழலில் நடைபெற்றது. நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளைக் கேட்டுக்கொண்டோம்; விரைவில் இந்தக்கூட்டணியை உறுதிசெய்து, அது குறித்து உங்களுக்குத் தெரிவிப்போம். அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் இந்தச் செயல்முறையை முடித்துவிடுவோம். அடுத்த கூட்டம் நாளை நடைபெறும்” என்று கூறினார்.



.

Previous Post

‘முக்கிய தகவல்களைப் பகிர WhatsApp Web பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!’- மத்திய அரசு அறிவுறுத்தல்

Next Post

அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர், தலைமைச் செயலாளருக்கு பரந்தாமன் கடிதம்! |paranthaman-writes-to-tn-governor-seeking-sanction-to-prosecute-minister-rajmohan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர், தலைமைச் செயலாளருக்கு பரந்தாமன் கடிதம்! |paranthaman-writes-to-tn-governor-seeking-sanction-to-prosecute-minister-rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர், தலைமைச் செயலாளருக்கு பரந்தாமன் கடிதம்! |paranthaman-writes-to-tn-governor-seeking-sanction-to-prosecute-minister-rajmohan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In