Wednesday, November 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பரங்குன்றம்: அதிரடி வாதங்களும் ஆட்சியர் தரப்பின் தடுமாற்றமும்! – நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2026
in அரசியல் செய்திகள்
0
திருப்பரங்குன்றம்: அதிரடி வாதங்களும் ஆட்சியர் தரப்பின் தடுமாற்றமும்! – நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. குறிப்பாக, தீபத்தூண் அமைந்துள்ள இடம் யாருக்குச் சொந்தம் என்ற நீதிபதிகளின் கேள்விக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் தடுமாறியதும், தர்கா தரப்பு முன்வைத்த வரலாற்று ஆதாரங்களும் இவ்வழக்கில் மிக முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

வழக்கின் பின்னணி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் தூண்

இதற்கிடையே, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மலைமீது இருக்கும் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை எதிர்த்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மூல மனுதாரர் ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வாதங்கள்

மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், “கோவில் அருகே உள்ள இடத்தில்தான் நூறாண்டுகளுக்கு மேலாக விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. அதைவிட்டுவிட்டு தர்கா பக்கத்தில் இருக்கும் இடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் என மனுதாரர் கோருகிறார். இவர்கள் தீபம் ஏற்றச் சொல்லும் இடம், ‘நிலத்தை அளவிட்டு அதை உறுதி செய்யும் ஒரு கல் தூண்’ ஆகத் தான் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மலைப்பகுதிகளில் நிலத்தை அளவீடு செய்ய இப்படியான கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மலைப்பகுதிகளிலும், எவரெஸ்ட் மலையை அளவிடப் பயன்படுத்தப்பட்ட புவியியல் கணக்கீட்டு முறைகளைப் போலவும் இத்தகைய நில அளவீடு கல் தூண்களைப் பார்க்க முடியும்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் உள்ள அந்தத் தூண் பார்ப்பதற்கு தீபத்தூண் போலவே இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதன் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால், உண்மையில் அது தீபத்தூண் கிடையாது. நில அளவிடும் கல்லாகும். இதற்கான ஆதாரங்களை ஆங்கிலேயர் காலம் முதல் சுதந்திரத்திற்குப் பிந்தைய நீதிமன்றத் தீர்ப்புகள் வரை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். தீபத்தூண் என்று இவர்கள் சொல்லும் அந்தப் பகுதி கோவில் நிர்வாகத்திற்குத்தான் சொந்தம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், அந்தப் பகுதிக்கு செல்லும் இடங்கள் அனைத்தும் தர்கா நிர்வாகத்திற்குச் சொந்தம்” என விரிவான வாதங்களை முன்வைத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும், மாவட்ட ஆட்சியர் தரப்பு தடுமாற்றமும்

வாதத்தின் நடுவே குறுக்கிட்ட நீதிபதிகள், “மனுதாரர் சொல்லும் அந்தத் தூண் இருக்கும் பகுதி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமா இல்லையா?” என மீண்டும் நேரடி கேள்வியை எழுப்பினர். இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கடுமையாகத் தடுமாறினார். “தர்கா தரப்பினர் அவர்களுக்கு சொந்தமான இடம் என்று சொல்கிறார்கள்” என அவர் கூறியபோது, அதிருப்தி அடைந்த நீதிபதிகள், “ஒரு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானதா இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்” என்று கண்டிப்புடன் கேட்டனர்.

திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம்

“நான் அதிகாரிகளிடம் கேட்டுச் சொல்கிறேன்” என வழக்கறிஞர் பதிலளித்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “ஒரு மாவட்ட ஆட்சியருக்கு கூட இந்த விஷயத்தில் என்ன தகவல் என்று தெரியவில்லை, என்ன நடக்கிறது” என்று குரல் எழுப்பினார்.

இதனையடுத்து, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம், “ஆமாம், அது கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம்தான்” என்று கூறச் சொல்ல, அதே வார்த்தையை உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் நீதிமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

தர்கா நிர்வாகத்தின் தரப்பு வாதங்கள்

தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “பல நூறாண்டுகளாக ‘நெல்லித்தோப்பு தர்கா’ என அழைக்கப்படும் சிக்கந்தர் தர்கா திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் இருந்து வருகிறது. இது ஒரு முழுமையான மசூதி கிடையாது. இஸ்லாமிய மத குருமார்களுக்கு அமைக்கப்படும் தர்கா ஆகும். இந்த இடத்தின் பட்டய உரிமைகள் மன்னர்கள் காலம் தொடங்கி, ஆங்கிலேயர்கள் காலம் வரை, அதன்பிறகு இந்திய அரசாங்கம் வரை தர்காவுக்கு சொந்தமானது என வரையறுக்கப்பட்டு ஆவணங்கள் உள்ளன. 1862 மற்றும் 1902 ஆகிய காலக்கட்டங்களில்கூட, தர்காவுக்கு சொந்தமான நிலப்பகுதிகளில் மாற்று மத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றபோது, அப்போது இருந்த ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் பொது அமைதியை முன்னிட்டும், மத வழிபாட்டு நடைமுறைகளை ஆராய்ந்தும் அவற்றை தடுத்திருக்கின்றனர்.

திருப்பரங்குன்றம்

நெல்லித்தோப்பு புது மண்டபம் படிக்கட்டுகள், இவர்கள் சொல்லும் நில அளவீடுகள், தர்கா அமைந்திருக்கக்கூடிய பகுதி மற்றும் அதன் பக்கத்தில் இருக்கும் கொடியேற்றும் இடம் என அனைத்தும் தர்காவிற்குச் சொந்தமான இடமே. பொதுவாக மலைப்பகுதிகளில் தீபம் ஏற்றுவது என்பது ஒட்டுமொத்த ஊர் மக்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். தற்போது உச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றினால் அதை அனைவரும் பார்க்க முடியும். மாறாக, இவர்கள் சொல்லும் நில அளவீடு கல் பகுதியில் ஏற்றினால், அதற்கு முன்பாக உள்ள கல்லறையும், கொடிமரமும், மற்ற மரங்களும் பெரும்பகுதி இடத்தை மறைத்துவிடும். இதனால் பொதுமக்கள் பார்க்க முடியாத இடத்தில் தீபம் ஏற்றுவது மரபும் கிடையாது” என வாதங்கள் வைக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் காலக்கெடு

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “விரிவான வாதங்கள் எதையும் தற்போது வைக்காதீர்கள். வெறும் இடைக்கால உத்தரவுக்கான வாதங்களை மட்டும் வையுங்கள். உங்களுடைய சக்திகள் அனைத்தையும் இறுதி விசாரணைக்காகச் சேமித்து வையுங்கள்” என்று அறிவுறுத்தினர்.

மேலும், விசாரணையில் வாதங்களை முன்வைக்க ஒவ்வொரு தரப்பிற்கும் திட்டவட்டமான நேர அளவை நீதிபதிகள் ஒதுக்கீடு செய்தனர்:

மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு: 15 நிமிடங்கள்

எதிர்மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்: 15 நிமிடங்கள்

மற்றொரு வழக்கறிஞர் தரப்பு: 10 நிமிடங்கள்

இந்தத் திட்டவட்டமான நேர ஒதுக்கீட்டிற்குப் பிறகு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம்: “‘தீபத் தூண்’ கட்டுக்கதை; நூற்றாண்டு மரபு மாறாது”- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு



.

Previous Post

இந்தியாவின் முதல் உள்நாட்டு பறவைக் காய்ச்சல் தடுப்புமருந்து… நவம்பர் 20-ல் அறிமுகம் செய்கிறார் சிவ்ராஜ் சிங் சௌகான்!

Next Post

தொழில் போட்டியில் சக வியாபாரிக்கு ஸ்கெட்ச்.. கேரளாவில் சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொழில் போட்டியில் சக வியாபாரிக்கு ஸ்கெட்ச்.. கேரளாவில் சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

தொழில் போட்டியில் சக வியாபாரிக்கு ஸ்கெட்ச்.. கேரளாவில் சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In