Wednesday, November 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2026
in அரசியல் செய்திகள்
0
SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர்,

“SIR-க்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. மாநில உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

SIR

அரசின் நலத்திட்டப் பயனாளிகளான 55 லட்சம் இந்து வாக்காளர்களும், 18 மற்றும் 19 வயதுடைய சுமார் 4.5 லட்சம் இளம் வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் விடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்பு. இந்த குளறுபடிகள் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்…’- அதிமுக பா.வளர்மதி பேச்சு

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா,

“வாக்காளர்களின் மதம் மற்றும் சாதி குறித்த எந்த தகவல்களையும் தேர்தல் ஆணையம் பராமரிப்பதில்லை. சாதி மதத்தை அளவுகோளாக கொண்டு எவ்வித அதிகாரப்பூர்வ பகுப்பாய்வுகளையும் வெளியிடுவதில்லை. வாக்காளர்களின் தரவுத்தளத்தில் வாக்காளரின் பெயர், தந்தை அல்லது கணவர்/மனைவியின் பெயர், வயது, வீட்டு எண் மற்றும் பாலினம் ஆகிய விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் மதம் மற்றும் சாதி தொடர்பான விவரங்கள் அதில் சேர்க்கப்படுவதில்லை.

உத்திரபிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா
உத்திரபிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா

வாக்காளர் பட்டியல் என்பது பொதுவான ஆவணம் என்பதால் ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆய்வாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் பிற தகவல்கள், தரவுகளின் அடிப்படியில் பகுப்பாய்வுகளை வெளியிடுவது உண்டு. அவற்றை தேர்தல் ஆணையத்தின் தரவுகளாக எடுத்துக்கொள்ள கூடாது. 2027 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 6.20 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 13.58 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

‘சூரசம்ஹார விழாவில் ஆகமவிதிகள் மீறப்பட்டனவா?’- சேகர் பாபுவின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரமேஷ் பதில்

வாக்காளர் பட்டியல் தொடர்பான உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தம் செய்ய முறையே படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SIR
SIR

டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீது தீர்வு காணப்பட்ட பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும். SIR-க்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, தற்போதைய வரைவுப் வாக்காளர் பட்டியலில் 18,84,113 வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் ஒன்று திருத்தப் பணிகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரும் கூட, தகுதியுள்ள குடிமக்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என்றார்.

“குதிரை பேரத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம்” – ‘விரைவில் திமுக ஆட்சி’ என்ற ஸ்டாலினுக்கு அருண்ராஜ் பதில்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி… மத்திய-மாநில அரசுகளின் புதிய திட்டம்! டெல்லியில் 2 நாள் மாநாடு தொடக்கம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In