Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார் – முழு விவரம் | former-justice-cs-karnan-passes-away-in-chennai

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார் – முழு விவரம் | former-justice-cs-karnan-passes-away-in-chennai
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான கருத்துகளுக்கு பெயர் பெற்றவருமான சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71), சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13, 2026) காலமானார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கர்ணன், ஜூன் 12, 1955-ல் பிறந்தவர். 1984-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்ட அவர், சென்னை உயர் நீதிமன்றம், நகர சிவில் நீதிமன்றங்கள் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்களில் சிவில், கிரிமினல், அரசியலமைப்பு மற்றும் பணி தொடர்பான வழக்குகளில் வாதாடி வந்தார்.

அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி, நீதிபதிகள் எஸ்.ஜே. முகோபாத்யாயா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய கொலிஜியம் செய்த பரிந்துரையை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் மூத்த நீதிபதிகள் பி.என். அகர்வால், அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, 2009-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவியேற்றார்.

"நான் தோற்றுப்போவேன் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறேன்" - சி.எஸ்.கர்ணன்!

“நான் தோற்றுப்போவேன் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறேன்” – சி.எஸ்.கர்ணன்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் சக நீதிபதிகள் தன்னைத் தவறாக நடத்துவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, மார்ச் 10, 2016 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு சென்ற பின்னரும் அவரது சர்ச்சைக்குரிய அதிரடி செயல்பாடுகள் தொடர்ந்தன. 2017-ல், சக நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக, அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கர்ணன் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. மேலும், நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளைச் செய்ய அவருக்குத் தடையும் விதித்தது.



.

Previous Post

பொன்னமராவதி குடியிருப்பு பகுதியில் இடையூறாக இரும்பு குடோன்; மக்கள் சிரமம் | Ponnamaravathi Scrap Shop in Residential Area: Public at Risk, Health Hazard – What Do Officials Say?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In