Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பொன்னமராவதி குடியிருப்பு பகுதியில் இடையூறாக இரும்பு குடோன்; மக்கள் சிரமம் | Ponnamaravathi Scrap Shop in Residential Area: Public at Risk, Health Hazard – What Do Officials Say?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
பொன்னமராவதி குடியிருப்பு பகுதியில் இடையூறாக இரும்பு குடோன்; மக்கள் சிரமம் 
| Ponnamaravathi Scrap Shop in Residential Area: Public at Risk, Health Hazard – What Do Officials Say?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேகுப்பட்டி, குழிபிறை, நெற்குப்பை, ஒழுகமங்களம், கொன்னப்பட்டி, கொன்னையூர், பூலாங்குறிச்சி, அரசமலை, காரையூர் எனப் பல்வேறு ஊர்களில் இருந்து பொன்னமராவதியில் இருக்கும் தனியார் பள்ளிகளில்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த வழியைத்தான் அமல அன்னை பள்ளி மற்றும் லயன்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் தினமும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, அமல அன்னை பள்ளியின் 6 பேருந்துகள், லயன்ஸ் பள்ளியின் 8 பேருந்துகள் என காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி வாகனங்கள் இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

ஆணி போன்ற இரும்புப் பொருட்கள் சில நேரங்களில் ரோட்டில் சிதறிக் கிடப்பதால் பள்ளிக்கு நடந்தே செல்லும் சிறு குழந்தைகள் வாகனங்களுக்கு இடையே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அபாய நிலை உள்ளது. பள்ளி வாகனங்களின் டயர்களும் பஞ்சர் ஆகிவிடுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி

சாலையோரம் கொட்டப்படும் பழைய பொருட்களால் அப்பகுதியின் சாக்கடைக் கால்வாய் முழுமையாக அடைத்துக்கொண்டு கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. மேலும், கடையின் வெளியே திறந்தவெளியில் கிடக்கும் பழைய சின்டெக்ஸ் டேங்குகளில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

வெவ்வேறு கிராமங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம்.

“ஆரம்பத்துல இருந்தே வெளிய எந்தப் பொருளும் போடாதீங்கனுதான் சொல்றோம். ஆனா, கேக்க மாட்றாங்க. குடோன்ல பிடிச்ச தீ, கடைக்கு முன்னாடி இருந்த பொருள்ல பிடிச்சிருந்தா அவுங்க கடையிலையும் தீ பிடிச்சுருக்கும்; எங்க வீட்டுலையும் பிடிச்சிருக்கும். கடைக்கு மேலதான் கரண்டு கம்பி போகுது.

கொசுத் தொல்ல அதிகமா இருக்கு. எங்க வீட்ல உள்ளவங்களுக்கு 2 வாரமா முடியல. பழைய வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், சின்டெக்ஸ் ஓப்பன்லே இருக்குறதால தண்ணி தேங்கிறுது. இவுங்க போடடுற குப்பையால சாக்கடை அடைச்சுக்குது.

பிளாஸ்டிக்க கம்ப்ரஸ் பண்ற மெஷின் வச்சிருக்காங்க. அதுல இருந்து வர சத்தத்தால வீட்லே இருக்கவே முடியல.

அவுங்க தொழிலும் பாதிக்கக் கூடாது. அதே நேரத்துல பக்கத்துல இருக்க வீட்டுக்காரங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது. வெளிய கெடக்குற பொருளெல்லாம் எடுத்து உள்ள வச்சுக்கிட்டா நல்லா இருக்கும். நாங்களும் பல தடவ சொல்லிட்டோம். ஆனா, கேக்கல. அதுனாலதான் சி.எம். செல்லுக்கு கம்ப்ளைன்ட் போட்டோம். ஆனா, அதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல. சீக்கிரம் தீர்வு கெடச்சா நல்லா இருக்கும்” என்றனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி

இதுகுறித்து விளக்கம் கேட்க பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டோம். தொட்டியம்பட்டி ஊராட்சியில் தற்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அந்த ஊராட்சியை கவனித்து வரும் மண்டல அலுவலரிடம் பேச அறிவுறுத்தினார்.

அதன்படி மண்டல அலுவலரிடம் கேட்டபோது, “தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடைக்கு நேரில் சென்று, ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை அகற்றச் சொல்லி எச்சரிக்கை விடுத்தோம். அதன் பேரில் அவர்களும் பெயரளவுக்கு சுத்தம் செய்திருந்தார்கள். இப்போது மீண்டும் பழைய ஃப்ரிட்ஜ், சின்டெக்ஸ் டேங்குகள் வெளியே இருப்பதாகத் தெரிவிக்கிறீர்கள்.

உடனடியாக ஊராட்சிச் செயலரை அனுப்பி மீண்டும் நேரில் பார்வையிடச் சொல்கிறேன். விரைவில் இதைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், பிளாஸ்டிக் கம்ப்ரஸ் இயந்திரம் வைக்க முறைப்படி அனுமதி (CTO) பெறப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “அது முந்தைய ஊராட்சி மன்றத் தலைவர் காலத்தில் வாங்கப்பட்டதா எனத் தெரியவில்லை; அதையும் நான் சரிபார்க்கிறேன்” எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து, முதலமைச்சர் தனிப்பிரிவில் மக்கள் அளித்த புகார் குறித்துக் கேட்டதற்கு, “ஆமாங்க சார்… மக்களும் புகார் பண்ணியிருக்காங்க. பள்ளிக் குழந்தைகளுக்கெல்லாம் ரொம்ப தொந்தரவா இருக்குனு சொல்லிருக்காங்க. சீக்கிரமே இதைச் சரிபண்ண உத்தரவு கொடுக்கிறேன்” என்றார்.



.

Previous Post

இந்தியா வரவிருந்த நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து; அரசியல் கட்சிகள் கண்டனம் – இதுதான் காரணமா? |Norwegian Journalist’s Visa to India Revoked Political Parties Condemn the Move

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In