Last Updated:
மதம் மாறியவர்களுக்கு பிசி சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
மதம் மாறி இஸ்லாமியத்தை தழுவியவர்களுக்கு பிசி சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்து மதத்திலிருந்து இஸ்லாம் உள்ளிட்ட இந்து அல்லாத மதங்களுக்கு மாறியவர்கள், தங்களது முந்தைய சாதி அடையாளத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பலன்களைக் கோர முடியாது என கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், மதம் மாறிய ஒருவர் தனது முந்தைய சாதி அடையாளத்தைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்ற பிரிவின் கீழ் சான்றிதழ் பெற முடியாது என்றும்,
மதமாற்றத்திற்குப் பிறகு பட்டியல் சாதிக்கான அந்தஸ்தையும் அதன் பலன்களையும் இழப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததையும் உறுதி செய்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

