Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘3 மணி நேர கூட்டம்; தீபாவளி பரிசோடு முக்கிய மெசேஜ்! – ஈ.சி.ஆர் ரெசார்டில் என்ன நடந்தது? | TVK MLA Meeting and Key Message by cm vijay Along with Diwali Gifts

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2026
in அரசியல் செய்திகள்
0
‘3 மணி நேர கூட்டம்; தீபாவளி பரிசோடு முக்கிய மெசேஜ்! – ஈ.சி.ஆர் ரெசார்டில் என்ன நடந்தது? | TVK MLA Meeting and Key Message by cm vijay Along with Diwali Gifts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அடுத்தடுத்து வந்த எம்.எல்.ஏக்களிடம், ‘ஆறு மாத ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். நம்முடைய நலத்திட்டங்களை மக்களிடம் பிரசாரமாக எடுத்துச் செல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். உங்களுக்கு எதாவது பிரச்னை என்றால் மாவட்ட அமைச்சரை நீங்கள் அணுகலாம். அப்படியும் இல்லையென்றால் நீங்கள் என்னையே சந்தித்து முறையிடலாம். தொகுதிப் பிரச்னைக்காகவும் கட்சிப் பிரச்னைக்காகவும் நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். பொதுவெளியில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

நமக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் நாம் விழுந்துவிடக் கூடாது. மக்கள் பணியில் மட்டும் முழுக்கவனம் செலுத்துங்கள். உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும்’ என நம்பிக்கை வார்த்தைகள் கூறி, சிலரின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு, ‘நான் உங்களின் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நன்றாகச் செயல்படுகிறீர்கள்’ என்றும் பாராட்டியிருக்கிறார்.

எல்லா எம்.எல்.ஏ-க்களிடமும் பேசி முடித்த பிறகு துணை சபாநாயகரையும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவையும் தனியாக அழைத்திருக்கிறார். இறுக்கமான முகத்தோடு அவர்களிடம் பேசிய முதல்வர், ‘ஆட்சியமைத்த முதல் நாளிலிருந்தே இங்கே யார் தவறு செய்தாலும் நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன், தூக்கி எறிந்துவிடுவேன் என எச்சரித்து வருகிறேன். அப்படியிருந்தும் நீங்கள் கட்சிக்கு அவப்பெயரை தேடிக் கொடுத்திருக்கிறீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள்’ நான் ஸ்டாப்பாக ரைடு விட்டிருக்கிறார்.

முதல்வரின் எரிச்சல் வார்த்தைகளில் நொந்து போன கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீடியாக்களிடம் முகத்தைக் காட்டிக் கொள்ளாமல் கடைசி ஆளாக ரெசார்ட்டிலிருந்து காரைக் கிளப்பிச் சென்றார்.

தீபாவளி கிப்ட் கொடுப்பதற்கு முதல்வர் மூன்று மணி நேர கூட்டத்தை நடத்தியதைப் போல தோன்றும். ஆனால், வேட்டி சேலையோடு முதல்வர் ஒரு முக்கிய மெசேஜையும் எம்.எல்.ஏக்களுக்குக் கடத்தியிருக்கிறார் என்கின்றனர் தவெகவின் சீனியர்கள். ‘கட்சி ஆட்களை குழுக்களாக தனித்தனியாக அழைத்து பேசுவது முதல்வர் வாடிக்கையாகக் கையாளும் ஸ்ட்ராட்டஜி.

தவெகவின் வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்பும் வாக்குப்பதிவுக்கு பின்பும் இப்படித்தான் சிறுசிறு குழுக்களாக தனியாகச் சந்தித்துப் பேசினார். இது அவர்களுக்கு முதல்வருடனான பிணைப்பை இன்னும் அதிகப்படுத்தும். ஒரு பெர்சனல் கனெக்ட்டை உருவாக்கும். முதல்வரே நம்மை அழைத்து கவனம் கொடுத்து பேசுகிறார் எனும் அந்த எண்ணம் அவர்களை கட்சிக்கு விசுவாசியாக மாற்றும். எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏக்களை விலை பேச நினைக்கும் இந்தத் தருவாயில் இது ஒரு முக்கியமான மூவ்’ என்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார்களா எனும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இந்த மூன்று மணி நேர கூட்டத்தின் மூலம் ரெசார்ட் பாலிட்டிக்ஸூக்கு டீசர் காட்டியிருக்கிறார் முதல்வர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.



.

Previous Post

“எதுவுமே மிச்சமில்லை… நிலைகுலைய வைத்த மருத்துவர் பதில்”: ராஜீவ் மரணத்தை நினைவுகூர்ந்து சோனியா காந்தி உருக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In