Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“எதுவுமே மிச்சமில்லை… நிலைகுலைய வைத்த மருத்துவர் பதில்”: ராஜீவ் மரணத்தை நினைவுகூர்ந்து சோனியா காந்தி உருக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2026
in அரசியல் செய்திகள்
0
“எதுவுமே மிச்சமில்லை… நிலைகுலைய வைத்த மருத்துவர் பதில்”: ராஜீவ் மரணத்தை நினைவுகூர்ந்து சோனியா காந்தி உருக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


1991 மே 21… தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். தனது கணவரின் மரணச் செய்தியை எதிர்கொண்ட அந்த இரவை, சோனியா காந்தி தனது சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ புத்தகத்தில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

அன்று இரவு கணவரின் படுக்கையின் பக்கத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த சோனியாவுக்கு, ராஜீவின் மரணச் செய்தி ஒரு பேரதிர்ச்சியை கொடுத்தது.

தோழியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த மகள் பிரியங்கா, திடீரென ஓடி வந்து தாயிடம் பதற்றத்துடன் பேசியுள்ளார்.

“ஒரு குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. அப்பாவைச் சுற்றியிருந்த 12 பேர் உயிரிழந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அப்பா நலமாக இருக்கிறார். நாம் உடனடியாக மெட்ராஸ் செல்ல வேண்டும்” என்று பிரியங்கா கூறியுள்ளார்.

பிரியங்காவின் முகம் வெளிறியிருந்தது, மூச்சு வேகமாக இருந்தது. ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை அவரது முகமே உணர்த்தியதாக சோனியா நினைவுகூர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் தகவல் அறியச் சென்ற பிரியங்கா மீண்டும் திரும்பி வந்தபோது, அவரது முகத்தில் தெரிந்த சோகமே உண்மையை உணர்த்தியது.

“அப்பா இறந்துவிட்டார்” என்று பிரியங்கா கூறிய அந்த துயரமான தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்கிறார் சோனியா.

ராஜீவின் தனிச் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜை தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியபோது, “ஆமாம், சார் இனி இல்லை” என்ற பதில் அவரை முற்றிலும் உடைத்தது.

அப்போது, அமெரிக்காவில் இருந்த ராகுல் காந்திக்கு நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, “ஒரு மோசமான செய்தி” என்று கூறியதும், “அப்பா இறந்துவிட்டார், இல்லையா?” என்று ராகுல் உடனடியாக கேட்டுள்ளார்.

படுகொலைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்றால் இறுதிச் சடங்கிற்காக தான் திரும்ப நேரிடும் என ராகுல் காந்தி அச்சத்துடன் கூறியதாகவும் சோனியா நினைவுகூர்ந்துள்ளார்.

முன்னதாக தந்தையுடன் ஸ்ரீபெரும்புதூர் செல்ல ராகுலும் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் பயணத் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர் அங்கு செல்லவில்லை. “அந்தத் தடங்கல் ஏற்பட்டிருக்காவிட்டால், ராஜீவின் அருகிலேயே ராகுல் இருந்திருப்பார் என்று சோனியா உருக்கமாக எழுதியுள்ளார்.

ராஜீவ் தனது கண்களை தானம் செய்திருந்தது நினைவுக்கு வரவே, குடும்ப மருத்துவர் மாத்தூரிடம் அதுபற்றி கேட்டுள்ளார். “கண்களா? இனி எதுவுமே மிச்சமில்லை… ஒன்றுமே இல்லை” என்ற மருத்துவரின் பதில் சோனியாவை மேலும் நிலைகுலைய செய்துள்ளது. அந்த வார்த்தைகள் ராஜீவின் மரணத்தின் கொடூரத்தை முழுமையாக உணர்த்தியதாக அவர் எழுதியுள்ளார்.

“ராஜீவ் அணிந்திருந்த ஆடைகள் இருந்த பையை திறந்து, என்றென்றும் பிரிந்துவிட்ட என் அன்புக்குரியவரின் வாசனையை மீண்டும் உணர முடியுமா எனத் தேடினேன்” என சோனியா எழுதியிருப்பது அவரது பிரிவுத் துயரத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்பு குளறுபடிகள்

ஒரு மனைவியாக இந்த மீளாத் துயரில் மூழ்கியிருந்த அதேவேளையில், ஒரு தலைவராக ராஜீவ் காந்தியின் பாதுகாப்பில் அரங்கேறிய அடுக்கடுக்கான குளறுபடிகள் மற்றும் அலட்சியங்கள் குறித்தும் சோனியா காந்தி பல்வேறு பகீர் கேள்விகளை எழுப்பியுள்ளார்!

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் சதித்திட்டமே படுகொலைக்கு காரணம் என விசாரணை அமைப்புகள் முடிவுக்கு வந்தன. ஆனால், படுகொலையின் பின்னணியில் இருந்த முழு உண்மையும் வெளிவந்துவிட்டதா என்ற கேள்வி சோனியா காந்தியின் மனதில் தொடர்ந்து இருந்துள்ளது.

தனது சுயசரிதையில், படுகொலைக்கு ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே ராஜீவை கொலை செய்ய வேண்டும் என்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் திட்டம் தொடர்பான வானொலி தகவல் இடைமறிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தகவல் இந்திய உளவுத்துறைக்குத் தெரிவிக்கப்பட்டும், உரிய விசாரணையும் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.

1990இல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, ராஜீவ் காந்தியின் சிறப்புப் பாதுகாப்புப் படை (SPG) பாதுகாப்பை திரும்பப் பெற்றதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்த இடம் கண்டறியப்பட்ட பின்னரும், அவர்களை பிடிக்க 36 மணி நேரத்திற்கும் மேலாக நடவடிக்கை தாமதிக்கப்பட்டதும், தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்ததும் ஏன்? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். காவலில் இருந்தபோது சந்தேக நபர் மரணமடைந்த விவகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உயர்மட்ட செல்வாக்குமிக்க நபர்களின் தொடர்புகள் மற்றும் பெரிய சதித்திட்டம் இருந்ததா? என்ற கேள்வியை ஜெயின் ஆணையத்தின் விசாரணையை சுட்டிக்காட்டி சோனியா எழுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த MDMA எனப்படும் பன்முக கண்காணிப்பு முகமை அமைப்பு 2022இல் கலைக்கப்பட்டதையும் அவர் விமர்சித்துள்ளார்.



.

Previous Post

உடைந்த பாகிஸ்தான் அணை; சிக்கலாகும் 700 மில்லியன் டாலர் பொருளாதாரம்; சீன நிறுவனம்தான் காரணமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In