Last Updated:
தனது 3-வது மனைவி அன்னா கொனிடெலாவை பிரிவதாக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
தனது 3-வது மனைவி அன்னா கொனிடெலாவை பிரிவதாக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் மற்றும் அன்னா கொனிடெலா இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பரஸ்பர சம்மதம் மற்றும் மரியாதையுடன் நாங்கள் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். திருமணம் முடிவுக்கு வந்தாலும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவும், எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோர்களாகவும் இருப்போம். அவர்களின் மகிழ்ச்சிக்கும், நலமான வாழ்வுக்கும் எப்போதும் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.
எங்களின் இந்த தனிப்பட்ட முடிவையொட்டி உங்களிடம், புரிதலையும், மரியாதையையும், தனியுரிமைக்கான மதிப்பையும் எதிர்பார்க்கிறோம். இந்த பயணத்தில் எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இருவரும் ஏற்கனவே குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்தப் பிரிவினை பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
அந்த அறிக்கையில் முடிவிற்கான காரணங்களோ, விவாகரத்து நடவடிக்கைகள் அல்லது குழந்தைகளின் காப்புரிமை ஏற்பாடுகள் குறித்தோ குறிப்பிடப்படவில்லை. பவன் கல்யாணை பொறுத்தவரை, கடந்த 1997-ம் ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2008-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தொடர்ந்து ரேணு தேசாய் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்தார். 2012-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். 2013-ம் ஆண்டு அன்னா கொனிடெலாவை திருமணம் செய்தார். தற்போது 13 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பவன் கல்யாணுக்கு 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

