Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால திருமண பந்தம்… 3வது மனைவியை பிரிந்தார் பவன் கல்யாண்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2026
in அரசியல் செய்திகள்
0
முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால திருமண பந்தம்… 3வது மனைவியை பிரிந்தார் பவன் கல்யாண்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 10, 2026 7:28 AM IST

தனது 3-வது மனைவி அன்னா கொனிடெலாவை பிரிவதாக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். 

பவன் கல்யாண் - அன்னா
பவன் கல்யாண் – அன்னா

தனது 3-வது மனைவி அன்னா கொனிடெலாவை பிரிவதாக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பவன் கல்யாண் மற்றும் அன்னா கொனிடெலா இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பரஸ்பர சம்மதம் மற்றும் மரியாதையுடன் நாங்கள் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். திருமணம் முடிவுக்கு வந்தாலும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவும், எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோர்களாகவும் இருப்போம். அவர்களின் மகிழ்ச்சிக்கும், நலமான வாழ்வுக்கும் எப்போதும் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.

எங்களின் இந்த தனிப்பட்ட முடிவையொட்டி உங்களிடம், புரிதலையும், மரியாதையையும், தனியுரிமைக்கான மதிப்பையும் எதிர்பார்க்கிறோம். இந்த பயணத்தில் எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இருவரும் ஏற்கனவே குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்தப் பிரிவினை பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

அந்த அறிக்கையில் முடிவிற்கான காரணங்களோ, விவாகரத்து நடவடிக்கைகள் அல்லது குழந்தைகளின் காப்புரிமை ஏற்பாடுகள் குறித்தோ குறிப்பிடப்படவில்லை. பவன் கல்யாணை பொறுத்தவரை, கடந்த 1997-ம் ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2008-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தொடர்ந்து ரேணு தேசாய் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்தார். 2012-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். 2013-ம் ஆண்டு அன்னா கொனிடெலாவை திருமணம் செய்தார். தற்போது 13 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பவன் கல்யாணுக்கு 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் உறுதி! தமிழ்நாட்டிற்கு டி.கே. சிவக்குமார் விடுத்த கோரிக்கை|Mekedatu Dam Row: DK Shivakumar Sends a Strong Message to TN

Next Post

“மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி: எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது என்ன நடவடிக்கை?” – கனிமொழி| “MLA Arul Vignesh Obscene text message sent even to the Collector” – Kanimozhi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” – கனிமொழி சாடல்!

``மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி: எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது என்ன நடவடிக்கை?" - கனிமொழி| "MLA Arul Vignesh Obscene text message sent even to the Collector" - Kanimozhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In