Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை" – அன்புமணி ராமதாஸ் காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2026
in அரசியல் செய்திகள்
0
"மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை" – அன்புமணி ராமதாஸ் காட்டம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்கான நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருக்கும் நிலையில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது…” என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை; அணை கட்ட உச்சநீதிமன்றமே அனுமதி அளித்து விட்டதால், தமிழ்நாடு உள்ளிட்ட யாருடைய அனுமதியையும் கோரத் தேவையில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியிருக்கிறார்.

காவிரியின் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை; மேகதாது விவகாரத்தை திசை திருப்பக் கூடியவை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திரிக்கும் தன்மை கொண்டவை.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. மேகதாது அணைக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதியும், அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது கடந்த மே 21 ஆம் தேதியும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி மத்திய நீர்வள ஆணையத்திற்காக காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

அந்த முடிவில் உடன்பாடு இல்லாதபட்சத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று தான் அறிவுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு தெரியும் முன்பே தங்களை அணுகத் தேவையில்லை என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இது கர்நாடக முதலமைச்சருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் அரசியல் இலாபங்களுக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துக் கூறுகிறார்.

அதேபோல், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு இயல்பான உரிமை எதுவும் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளை பாதிக்கும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக்கூடாது என்பது தான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தங்களின் இந்தக் கூறுகள் செல்லும் என்று 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அளிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும், 2018 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்திற்கு அணை கட்டும் உரிமை எவ்வாறு கிடைக்கும்?

அன்புமணி
அன்புமணி

இவற்றையெல்லாம் அறிந்திருக்கும் மேகதாது அணை சிக்கலை டி.கே.சிவகுமார் கையில் எடுப்பதன் நோக்கம் அரசியல்தான். ஏற்கனவே பலமுறை நான் குற்றஞ்சாட்டியுள்ளவாறு, கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் 15 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேகதாது அணை விவகாரத்தை அரசியலாக மாற்றுவதன் மூலம் கர்நாடகத்தில் காவிரி பாயும் 11 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதுதான் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் திட்டமாகும். அதே அரசியல் கணக்குகளுக்காக இந்த நாடகங்களுக்கெல்லாம் மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவளிக்கும்.

மேகதாது அணை கட்டுவதற்கான சட்டப்பூர்வ உரிமை மட்டுமின்றி, தார்மீக உரிமை கூட கர்நாடக அரசுக்கு கிடையாது. ஓராண்டில் கூட நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படியோ, இறுதித் தீர்ப்பின்படியோ தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கியதில்லை. காவிரி நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டை சட்டப்பூர்வ பங்காளியாக கருத வேண்டிய கர்நாடக அரசு, வடிகாலாக கருதி வெள்ளநீரை மட்டுமே திறந்து விடுகிறது.

வேறு வழியில்லாமல் வெள்ள நீரை திறந்து விட்ட கர்நாடக அரசு, புதிய அணையை கட்டி கூடுதலாக 70 டி.எம்.சி நீரைத் தேக்கி வைக்கும் திறனைப் பெற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு தவறாமல் தண்ணீர் வழங்குவதாகக் கூறுவதை குழந்தைகள் கூட நம்பாது. இதை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் ஒருபோதும் நம்பக் கூடாது.

கர்நாடகத்தில் தேர்தல் நெருங்க, நெருங்க மேகதாது அணை தொடர்பான பொய்மூட்டைகளையும், திரிபு வாதங்களையும் கர்நாடக அரசு அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட கர்நாடக முதலமைச்சர் திரித்துக் கூறுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. இதற்காக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

புற்றுநோய் மருந்துகளின் விலை 96.45% வரை குறைப்பு… இன்று முதல் அமல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In