Last Updated:
ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கையின்போது போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ரோஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வைரலாகும் வீடியோ.
ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ரோஜா, காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள பட்டப்படிப்பு கல்லூரியில் இல்லத்தூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் (YSRCP) வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சி வேட்பாளர் மறு வாக்கு எண்ணிக்கை கோரிய நிலையில், மறு வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
నగరి డిగ్రీ కాలేజీ ఎదుట మాజీ మంత్రి ఆర్కే రోజా ఆందోళన
నియోజకవర్గ పరిధిలోని ఇల్లత్తూరు ఎంపీటీసీ స్థానంలో వైసీపీ గెలిచినా టీడీపీ గెలిచినట్లు ప్రకటించారని ఆరోపణవైసీపీ కార్యకర్తలతో కలిసి కాలేజీ ఎదుట బైఠాయించి నిరసన
రోజాను బలవంతంగా అదుపులోకి తీసుకున్న పోలీసులు
#APParishadResults #RKRoja #TV9Telugu
— TV9 Telugu (@TV9Telugu) November 7, 2026
இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் முறைகேடு செய்து தேர்தல் முடிவை மாற்றியதாகக் கூறி, முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோஜாவை, காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

