Last Updated:
துணை குடியரசு தலைவர் சிபி.ராதாகிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
‘மகிழ்ச்சியும், அமைதியும் வளமும் ஏற்படட்டும்..’ என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளம் மூலம் நாட்டு மக்களுக்குத் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
வழக்கம்போலவே, இந்த தீபாவளித் திருநாளிலும் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் தனது நீண்டகாலத் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாகப் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ அதிக விருப்பங்களை சமூக வலைதளங்களில் குவித்து வருகிறது.
இதேபோன்று துணை குடியரசு தலைவர் சிபி.ராதாகிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

