Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எல்பிஜி தீயை அணைக்க தண்ணீரை ஊற்றுவதா? யார் கொடுத்த பயிற்சி? பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு விமர்சனம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2026
in அரசியல் செய்திகள்
0
எல்பிஜி தீயை அணைக்க தண்ணீரை ஊற்றுவதா? யார் கொடுத்த பயிற்சி? பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு விமர்சனம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 05, 2026 11:03 AM IST

பெங்களூருவில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க டெலிவரி ஊழியர் தண்ணீரை ஊற்றிய செயல் இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை பெற்றுள்ளது.

பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு எதிர்ப்பு
பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு எதிர்ப்பு

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் கேஸ் விநியோகம் செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தில் கேஸ் சிலிண்டர் பற்றி எரிந்த சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி திகிலை ஏற்படுத்தியது. வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கு மூலமாக தீப்பிடித்த காட்சிகள் வைரலான நிலையில் தீயை அணைக்க டெலிவரி ஊழியர் மேற்கொண்ட முயற்சிகள் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், டெலிவரி ஊழியர் ஒருவர் கேஸ் சிலிண்டரை தோளில் சுமந்தவாறு எடுத்து வருகிறார். வீட்டு வாசலில் கேஸ் சிலிண்டரை அவர் பரிசோதனை செய்த போது வாயு கசிவு இருந்துள்ளது. அப்போது அங்கே இருந்த அகல்விளக்கின் சுடருடன் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீப்பிடித்தது. கேஸ் சிலிண்டரில் பற்றிய தீ வேகமாக எரிய தொடங்கியதால் டெலிவரி ஊழியர் பதறியடித்து ஓட்டம் பிடித்தார்.

கேஸ் சிலிண்டர் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. சில விநாடிகளுக்கு பின் வந்த டெலிவரி ஊழியர் அங்கிருந்த தீப்பிடித்த எரிந்த துணியை அப்புறப்படுத்தினார். மேலும் தீயை அணைக்க பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்தார். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கேஸ் சிலிண்டரில் இருந்த தீயை அணைக்க முயற்சித்தார். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், எல்பிஜி சிலிண்டர்களைக் கையாளும்போது, ​​குறிப்பாக அவற்றை எடுத்துச் செல்லும்போதும் மற்றும் நிறுவும்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடியிருப்பாளர்களையும் விநியோகப் பணியாளர்களையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கேஸ் சிலிண்டர் பற்றி எரிந்த போது அதை அணைக்க டெலிவரி ஊழியர் தண்ணீரை பயன்படுத்திய விதம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒரு பயனாளர், “சிலிண்டர் விநியோகப் பணியாளர் இந்தச் சூழ்நிலையை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்… ஒருவேளை அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்காது,” என்று எழுதியிருந்தார். மேலும் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பயனாளர், அந்த முகவரின் தீ பாதுகாப்பு குறித்த புரிதலையும், எல்பிஜி தொடர்பான தீயை எவ்வாறு சரியான முறையில் கையாள்வது என்பதையும் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், “அந்த டெலிவரி ஊழியர் சரியான முறையை கையாளவில்லை. எல்பிஜியில் ஏற்படும் தீயை அணைக்க யார் தண்ணீரைப் பயன்படுத்துவார்கள்? அவன் அதை மூடுவதற்கு ஒரு ஈரத்துணியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார்.



.

Previous Post

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? – பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்! |“New Secretariat in Pattinapakkam!” – Is CM Vijay Firm on the Location?

Next Post

புதிய தலைமைச் செயலகம்: "தமிழ்நாடு அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?" – பூவுலகின் நண்பர்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய தலைமைச் செயலகம்; கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்! |New Secretariat Project: Government Cancels Postponed Public Consultation Meeting?

புதிய தலைமைச் செயலகம்: "தமிழ்நாடு அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?" - பூவுலகின் நண்பர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In