Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதிய தலைமைச் செயலகம்: "தமிழ்நாடு அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?" – பூவுலகின் நண்பர்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2026
in அரசியல் செய்திகள்
0
புதிய தலைமைச் செயலகம்; கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்! |New Secretariat Project: Government Cancels Postponed Public Consultation Meeting?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். அதற்கான இடமாக பட்டினப்பாக்கத்தில் கடலுக்கு அருகே இருக்கும் சுமார் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

மேலும் திட்ட அறிக்கையும் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் தலைமைச் செயலகம் அமைவதை 12 கிராம மீனவ மக்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகளும், தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் இடதுசாரிகட்சிகளும் மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்தன.

பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம்

இதற்கிடையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர்கள் மூலம் தவெக அரசு தெரிவித்தது. மேலும், மீனவர்களுக்கு எதிராக அரசு செயல்படாது எனவும், மீனவர்களுடன் ஆலோசித்த பிறகே தலைமைச் செயலகம் தொடர்பாக அரசு தீர்மானமான முடிவை அறிவிக்கும் எனவும் கூறப்பட்டது. அதனால் இந்த விவகாரம் சில வாரங்களாக அமைதியானது.

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? – பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!

இதற்கிடையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “பட்டினப்பாக்கம் முதல் நுசந்திரா வரை: கடல் அபாயத்திலிருந்து தலைநகரை மாற்றும் இந்தோனேசியா. கடலை நோக்கி தலைமைச் செயலகம் அமைக்க முயலும் தமிழ்நாடு!

பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வு உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதை உணர்ந்த இந்தோனேசியா, தனது தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவில் உள்ள நுசந்தாராவுக்கு மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று, இந்தோனேசியா தனது தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து, போர்னியோ தீவின் கிழக்குப் பகுதியில் சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிழக்கு கலிமந்தானுக்கு மாற்றுவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.

அந்நாட்டின் புதிய தலைநகருக்கு ‘நுசந்தாரா’ (Nusantara) என்று பெயரிடப்பட்டுள்ளது; இதற்கு “தீவுக்கூட்டம்” என்று பொருள். ஜகார்த்தா இந்தோனேசியாவின் தலைநகராக 1949முதல் முதல் செயல்பட்டுவருகிறது. ஜகார்த்தாவில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் நிலம் தாழ்ந்து வருகிறது.

கடல் மட்ட உயர்வும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் நிபுணர்களின் கூற்றுப்படி, 2050-ஆம் ஆண்டிற்குள் இந்நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி நீருக்கடியில் மூழ்கக்கூடும். இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்தை முதன்முதலில் 2019-ஆம் ஆண்டு அறிவித்தார். எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து இந்தோனேசியா இந்த முடிவை எடுத்துள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை நேர்மாறாக உள்ளது.

 2004ஆம் ஆண்டு சுனாமியின் பேரழிவைச் சந்தித்த சென்னை கடற்கரைக்கு அருகிலுள்ள பட்டினப்பாக்கத்தில், சுமார் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டது. சென்னை காலநிலைச் செயல்திட்டத்தின்படி, 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் சுமார் 78 சென்டிமீட்டர் உயரக்கூடும்.

இத்தகைய சூழலில் கடலோரப் பகுதியில் மாநிலத்தின் முக்கிய நிர்வாக மையத்தை அமைப்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் கடற்கரைச் சூழலியலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒரு நாடு கடல் அபாயத்திலிருந்து தனது தலைநகரைப் பாதுகாக்க முயலும்போது, தமிழ்நாடு அதே அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழா; முதல்வர் விஜய், தொழிலதிபர் அதானி பங்கேற்பு!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

எல்பிஜி தீயை அணைக்க தண்ணீரை ஊற்றுவதா? யார் கொடுத்த பயிற்சி? பெங்களூரு டெலிவரி ஊழியர் செயலுக்கு விமர்சனம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

Next Post

US Mid Term Election: ட்ரம்ப் கட்சி படுதோல்வி; இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்குப் பணமழை \ Trump’s party defeated in US midterm elections; Indian stock market investors gain Rs 8 lakh crore

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
US Mid Term Election: ட்ரம்ப் கட்சி படுதோல்வி; இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்குப் பணமழை \ Trump’s party defeated in US midterm elections; Indian stock market investors gain Rs 8 lakh crore

US Mid Term Election: ட்ரம்ப் கட்சி படுதோல்வி; இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்குப் பணமழை \ Trump’s party defeated in US midterm elections; Indian stock market investors gain Rs 8 lakh crore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In