Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குடும்பத் தகராறில் கொடூரம்.. மனைவியின் தலையை துண்டித்த சைக்கோ கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2026
in அரசியல் செய்திகள்
0
குடும்பத் தகராறில் கொடூரம்.. மனைவியின் தலையை துண்டித்த சைக்கோ கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 05, 2026 8:47 PM IST

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில், மனைவியின் தலையைத் துண்டித்து காளி கோவிலுக்குக் கொண்டு சென்று மடியில் வைத்தபடி அமர்ந்த கணவனால்பெரும் பதற்றம் ஏற்பட்டது. அருகிலேயே இரண்டு மகன்களும் அமர்ந்திருந்ததால் அப்பகுதியில் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். நடந்தது என்ன?.

மனைவியின் தலையை துண்டித்த சைக்கோ கணவன்
மனைவியின் தலையை துண்டித்த சைக்கோ கணவன்

மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டம், கங்காராம்பூர் நகரின் நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு கோஷ். இவரது மனைவி சீமா சர்க்கார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னதாக, வடக்கு வங்காள, மாநிலப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்த ரிண்டு கோஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். அதன்பிறகு, நிலையான வருமானம் இல்லாமல் சிறு சிறு தொழில்களைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வேலை இழந்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒருபுறம், கணவன், மனைவிக்கு இடையே நீடித்து வந்த குடும்பப் பிரச்சினை மறுபுறம் என ரிண்டு கோஷின் குடும்ப வாழ்க்கையில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்துள்ளன. இந்தச் சூழலில், சம்பவத்தன்று அதிகாலை ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை கணவன், மனைவி இடையே பெரும் தகராறு வெடிக்க ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற ரிண்டு கோஷ், விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தால் மனைவியைத் தாக்கிக் கொலை செய்ததுடன், அவரது தலையையும் துண்டித்துள்ளார்.

பின்னர், மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகில் இருந்த காளி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கே மனைவியின் தலையைத் தனது மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அதிர்ச்சியூட்டும் வகையில், அவருடன் இரண்டு மகன்களும் அருகிலேயே இருந்துள்ளனர். கோவிலுக்கு வந்த உள்ளூர் மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதுகுறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த கங்காராம்பூர் போலீசார், கோவிலைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர். அங்கு மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன், கையில் கூர்மையான ஆயுதத்தையும் வைத்திருந்த ரிண்டு கோஷை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிசிடிவியில் தெரிந்த மர்ம உருவங்கள்.. முதலமைச்சர் இல்லம் அருகே நடந்த பகீர் சம்பவம்.. நீலாங்கரையில் பரபரப்பு!

இதனைத்தொடர்ந்து, வீட்டுக்குச் சென்ற போலீசார், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சீமாவின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய ரிண்டு கோஷ், தனது வேலை பறிபோனதிலிருந்து தான் ஒரு சைக்கோவாக மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே, அவரது உறவினர்கள் தெரிவித்த தகவல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வேலையை இழந்த பிறகு பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ரிண்டு கோஷின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக மாற்றம் ஏற்பட்டதாகவும், அசைவ உணவுகளைத் தவிர்த்து முழுமையான சைவ உணவுக்கு மாறியதுடன், தாந்திரீக முறைகளில் நாட்டம் காட்டியதாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், வேலை இழந்ததுதான் இந்தக் கொலைக்குக் காரணமா? அல்லது கணவன், மனைவிக்கு இடையே நீடித்து வந்த குடும்பப் பிரச்சினை விபரீதத்தில் முடிந்ததா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இரண்டு குழந்தைகளின் கண் முன்னே தாயின் உயிரைப் பறித்துவிட்டு, அவரது தலையுடன் கோவிலில் அமர்ந்திருந்த கணவனின் செயல் மேற்கு வங்கத்தை உலுக்கியிருக்கிறது.



.

Previous Post

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழா; முதல்வர் விஜய், தொழிலதிபர் அதானி பங்கேற்பு!| CM Vijay, Adani Attend Jagan Mohan Reddy’s Family Wedding

Next Post

திருப்பரங்குன்றம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை எதிர்த்து தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பரங்குன்றம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை எதிர்த்து தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

திருப்பரங்குன்றம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை எதிர்த்து தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In