Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பொது இடத்தில் மது குடித்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட ஊர்க்காவல்படை வீரர் அடித்துக்கொலை" – அன்புமணி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
தப்பிய சிறைக் கைதிகள்: “இந்த நிகழ்வு குறித்து பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது” – அன்புமணி கேள்வி| Anbumani has raised a question regarding the incident where prisoners escaped.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மது குடித்ததைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அன்புமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரியலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்டதற்காக தளவாய் காவல் நிலைய வளாகத்தில் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவர் போதையிலிருந்த 3 இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி
அன்புமணி

காவலர்களுடன் இணைந்து வெங்கடேசன் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆதனங்குறிச்சி என்ற இடத்தில் 3 இளைஞர்கள் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் கண்டித்து அங்கிருந்து அனுப்பியுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அடுத்த சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு அருகில் வந்து, சுற்றுக்காவல் முடித்து திரும்பிய வெங்கடேசனை கண்மூடித்தனமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

கடமையை செய்த ஊர்க்காவல் படைவீரர் குடிகாரர்களால் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் மாதம் ரூ.2800 என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், அவரது இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகி தவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டும், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் பணியில் இருந்த போது கொல்லப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டும் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா?” – தவெக அமைச்சருக்கு அன்புமணி கண்டனம்



.

Previous Post

தாய் கண்முன்னே கடத்தப்பட்ட குழந்தை.. ஆந்திராவில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இபிஎஃப்ஓ அமைப்பின் 74 ஆண்டுகாலப் பயணம்! அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இபிஎஃப்ஓ அமைப்பின் 74 ஆண்டுகாலப் பயணம்! அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

இபிஎஃப்ஓ அமைப்பின் 74 ஆண்டுகாலப் பயணம்! அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In