Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாய் கண்முன்னே கடத்தப்பட்ட குழந்தை.. ஆந்திராவில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
தாய் கண்முன்னே கடத்தப்பட்ட குழந்தை.. ஆந்திராவில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 01, 2026 6:50 PM IST

ஆந்திர மாநிலம் குண்டூரில் தாயின் கண்முன்னே இரண்டு மாதக் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை மீட்க 4 தனிப்படைகள் அமைப்பு.

குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சிகள்
குழந்தை கடத்தல் – சிசிடிவி காட்சிகள்

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கடை முன் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத குழந்தையை மங்கி குல்லா அணிந்து வந்த மர்ம நபர்கள் , கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் லால்பேட்டா பகுதியில், பழைய இரும்பு பொருட்களை சேகரித்து விற்கும் லக்ஷ்மய்யா என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தினமும் சாலையோரம் படுத்துறங்குவது வழக்கம். சம்பவத்தன்று இரவு வழக்கமாக பொருட்கள் விற்கும் இரும்பு கடை வாசலில் குடும்பத்துடன் படுத்திருந்தனர்.

அப்போது நள்ளிரவு சுமார் 2:20 மணியளவில் அங்கு மங்கி குல்லா அணிந்து வந்த மர்ம நபர்கள், லக்ஷ்மய்யாவை நெருங்கினர். எதிர்பாராத நேரம் தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடினர். சத்தம் கேட்டு எழுந்த தாய் கண் எதிரே தனது குழந்தையை மர்ம நபர்கள் தூக்கிக்கொண்டு ஓடுவதைக் கண்டு துடிதுடித்துப் போனார்.

பின்னால் கூச்சலிட்டபடி துரத்திக் கொண்டே ஓடியும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிய மர்ம நபர்கள் தெரு முனையில் பைக்கில் காத்திருந்த தங்களது கூட்டாளியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குண்டூர் மாவட்டம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குண்டூர் எஸ்பி வகுல் ஜிண்டால் உத்தரவின் பேரில் 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட எல்லைகளில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் குற்றவாளிகளின் உதவியுடனும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர். கடத்தல் நடப்பதற்குச் சற்று முன்பு, குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கும், கடத்தலில் ஈடுபட்ட அந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த இளைஞர்கள் திட்டமிட்டே பழிவாங்கும் நோக்கில் இந்தத் துணிகரக் கடத்தலை அரங்கேற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் குற்றவாளிகள் பிடிபட்டால் மட்டுமே குழந்தை மீட்கப்படும் ; சம்பவத்திற்கான உண்மை பின்னணி குறித்தும் தெரியவரும்.



.

Previous Post

பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்! pernuthurai resignation mla jayakumar government events attending controversy

Next Post

“பொது இடத்தில் மது குடித்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட ஊர்க்காவல்படை வீரர் அடித்துக்கொலை" – அன்புமணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தப்பிய சிறைக் கைதிகள்: “இந்த நிகழ்வு குறித்து பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது” – அன்புமணி கேள்வி| Anbumani has raised a question regarding the incident where prisoners escaped.

``பொது இடத்தில் மது குடித்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட ஊர்க்காவல்படை வீரர் அடித்துக்கொலை" - அன்புமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In