Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" – அமைச்சர் கீர்த்தனா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2026
in அரசியல் செய்திகள்
0
“என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" – அமைச்சர் கீர்த்தனா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிவகாசியில் நடைபெற்ற ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பெண்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கி பிராண்டுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அரசு இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வருவதில் அரசு தீவிரமாக உள்ளது. என் வீடு தொடர்பான குற்றச்சாட்டு, ரூ.3 கோடி பெற்றதாக எழுந்தக் குற்றச்சாட்டு என அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே என் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளின் பயமே. பல தடைகளுக்கு நடுவேயும் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தல், கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு பயணங்கள் எனத் தொழிற்துறை வளர்ச்சிப் பணிகளை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஹூண்டாய் திட்டம் தூத்துக்குடிக்குத்தான் வரவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிடும் என்று விமர்சித்தவர்கள், தற்போது உண்மை வெளிவந்ததும் அதைப் பற்றிப் பேசுவதில்லை.

எனக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை விடுத்து வீண் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தேட முடியாது. பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பொய்க் குற்றச்சாட்டுகளால் ஒருவரை முடக்கப் பார்க்காதீர்கள்.

ஜெயலலிதா அம்மாவுக்கும் இதேபோலத்தான் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு முடக்கப்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் வெகுண்டெழுந்து மீண்டு வந்தார்கள். அதேபோல் நானும் மீண்டு வருவேன்” என்றார்.

`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்… 3 கோடி ரூபாய் கமிஷன்?’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்



.

Previous Post

கேரளா: “எங்களுக்கு தெரியாமல் காரை எடுத்துவிட்டான்” – மகனின் பென்ஸ் கார் விபத்தில் சிக்கிய நீதிபதி மனு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“இனி இப்படி செய்தால் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது” – அதிரடி கண்டிஷன் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இனி இப்படி செய்தால் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது” – அதிரடி கண்டிஷன் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு! | India News (இந்தியா செய்திகள்)

"இனி இப்படி செய்தால் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது" - அதிரடி கண்டிஷன் வெளியிட்ட உத்தரபிரதேச அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In