Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.!’- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி| cpi veerapandiyan on joining with dmk and tvk government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
‘ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.!’- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி| cpi veerapandiyan on joining with dmk and tvk government
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேர்தல் பணிகளில் திமுகவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கூறியிருக்கிறீர்கள். இது தேர்தல் நேரத்திற்கான தற்காலிக முடிவா அல்லது கொள்கை ரீதியான அணுகுமுறையா?

திமுக, தவெக, அதிமுக போன்ற கட்சிகள் எங்களுக்குக் கொள்கை ரீதியிலான எதிரிகள் அல்ல. அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எங்களுக்கு ஒரே எதிரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக மட்டுமே. மற்றவை அனைத்துமே ஜனநாயக சக்திகளாகவே கருதப்படுகின்றன. தமிழ்நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும் திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து போராடவும் செயலாற்றவும் எங்களால் முடியும். அதுவே எங்களின் கொள்கை வழிப்பாடு.

திமுகவுடன் இணைவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?

தேர்தல் கூட்டணி என்பது கட்சி முடிவு செய்யும் விஷயம். ஆனால் கொள்கை அளவில் திமுகவும் கம்யூனிச இயக்கமும் எதிரிகள் அல்ல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். திமுகவின் ஜனநாயகப் பங்களிப்பையும் மதிக்கிறோம். எனவே, வகுப்புவாத சக்திகளை முறியடிக்க இத்தகைய ஜனநாயக சக்திகளுடன் இணைவது ஒரு கொள்கை நிலை. தேர்தல் சூழல் வரும்போது கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஸ்டாலின்

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு மதிப்பிடுகிறது?

நாங்கள் ஆரம்பத்தில் ஆதரவளித்தபோதே சில அரசியல் நிபந்தனைகளை முன்வைத்தோம். மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்க வேண்டும், தமிழக நலன்களைக் காக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே அவை. உழைக்கும் மக்கள், விவசாயிகள், துப்புரவுப் பணியாளர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதேவேளையில், தனியார்மயம் மற்றும் தாராளமயம் போன்ற ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை; அதனை அறிக்கைகள் மூலமாக எதிர்த்தும் கண்டித்தும் வருகிறோம். மக்களின் விருப்பத்திற்கு மாறாகப் பட்டினப்பாக்கத்தில் மீனவர் குடியிருப்புப் பகுதியில் அரசு அலுவலகம் அமைப்பதையோ, விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையோ எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.



.

Previous Post

கொல்கத்தாவில் ரூ.13.5 கோடி மதிப்பிலான ஈ சிகரெட்டுகள் பறிமுதல்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தியாவின் தொழில் உற்பத்தி 6.7% வளர்ச்சி… மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவின் தொழில் உற்பத்தி 6.7% வளர்ச்சி… மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

இந்தியாவின் தொழில் உற்பத்தி 6.7% வளர்ச்சி... மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In