Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராஜினாமா செய்த எல்.முருகன்; இடைத் தேர்தல் வேட்பாளராக அமைச்சரை அறிவித்த பாஜக | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
ராஜினாமா செய்த எல்.முருகன்; இடைத் தேர்தல் வேட்பாளராக அமைச்சரை அறிவித்த பாஜக | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 28, 2026 3:22 PM IST

எல். முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்.பி. இடைத் தேர்தலில், மத்திய அமைச்சரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

News18
News18

மத்திய அமைச்சராக இருந்துவந்த தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவர் எல். முருகன், கடந்த 14ஆம் தேதி தனது அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த எல். முருகன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் மத்திய அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் புரியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மத்திய இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி எல். முருகன் தனது அமைச்சர் மற்றும் எம்.பி. ஆகிய இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்தார்.

2030ஆம் ஆண்டு வரை அவரது எம்.பி. பதவி காலம் இருந்தபோதிலும், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியலில் கவனம் செலுத்தப்போவதாக எல்.முருகன் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவரது ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து எல்.முருகன் ராஜினாமா செய்த மத்தியப் பிரதேச மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவித்தது.

அதன்படி வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் காலியாகியிருக்கும் ஒரு மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.



.

Previous Post

சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல

Next Post

அன்பில் மகேஷ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? – anbil magesh case business woman house raid

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அன்பில் மகேஷ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? – anbil magesh case business woman house raid

அன்பில் மகேஷ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு - பின்னணி என்ன? - anbil magesh case business woman house raid

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In