Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அன்பில் மகேஷ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? – anbil magesh case business woman house raid

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
அன்பில் மகேஷ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? – anbil magesh case business woman house raid
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டிட அனுமதி உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தன. அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தி.மு.க செய்தி தொடர்பாளர் பி.டி அரசகுமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்தச் சூழலில் அன்பில் மகேஸ், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சண்முகபிரியா

சண்முகபிரியா

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக சென்னையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலதிபர் சண்முகபிரியாவின் பெருங்குடி வீடு, நீலாங்கரை வீடு ஆகியவற்றில் இன்று (28.10.2026) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

சண்முகபிரியாவின் வீட்டில் ரெய்டு நடத்தியது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரித்தோம். “ தனியார் பள்ளிகள் கொடுத்த லஞ்சம் பணம், பெண் தொழிலதிபர் சண்முகபிரியா நடத்தும் பிசினஸில் முதலீடு செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில்தான் இந்த அதிரடி ரெய்டை நடத்தியிருக்கிறோம். அதற்கு ஆதாரமாக தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது லட்சக்கணக்கான பணம் சண்முகபிரியாவின் பிசினஸ் வங்கி கணக்குகளுக்கு சென்றிருக்கின்றன. அதுதொடர்பாகத்தான் பெண் தொழிலதிபர் சண்முகபிரியாவின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தினோம். பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் சண்முகபிரியாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்”‘ என்றனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கை பொறுத்தவரை தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் சிக்கினால் எதிர்பாரத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் முத்துக்குமாரின் வங்கி கணக்குகள், கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்குட்படுத்தியதில்தான் பெண் தொழிலதிபர் சண்முகபிரியா குறித்த தகவல்கள் தெரியவந்தது. இவரின் பிசினஸ் குறித்த தகவல்களை சேகரித்திருக்கிறோம். அன்பில் மகேஸ் டீமுக்கும் சண்முகபிரியாவுக்கும் உள்ள பின்னணிகள் குறித்து விசாரித்து வருகிறோம். சண்முகபிரியாவின் தொடர்பு வட்டாரத்தில் இருக்கும் சிலர் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. விரைவில் அங்கும் ரெய்டு நடத்தப்படும்” என்றார்.



.

Previous Post

ராஜினாமா செய்த எல்.முருகன்; இடைத் தேர்தல் வேட்பாளராக அமைச்சரை அறிவித்த பாஜக | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ராஜஸ்தான் அரசியல் தலைவர்களுக்குத் திருமண சீசனில் ஏன் சிக்கல்? – விடுதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராஜஸ்தான் அரசியல் தலைவர்களுக்குத் திருமண சீசனில் ஏன் சிக்கல்? – விடுதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி | India News (இந்தியா செய்திகள்)

ராஜஸ்தான் அரசியல் தலைவர்களுக்குத் திருமண சீசனில் ஏன் சிக்கல்? - விடுதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In