Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாடகை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்.. ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நாக்பூரில் பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
வாடகை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்.. ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நாக்பூரில் பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 26, 2026 9:49 PM IST

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வாடகை கொடுக்காததால் ஏற்பட்ட தகராறு, மிகப்பெரிய கள்ள நோட்டு விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. அறைக்குள் மொத்தம்.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கியுளளன. வாடகைக்கு அறை எடுத்து கள்ள நோட்டு அச்சடித்தவர் சிக்குவாரா?.

கைதானவர்கள்
கைதானவர்கள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் கார்பி பகுதியில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் புஷ்பக் கிருஷ்ணா பண்டார்கர் என்ற நபர். வாடகை ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்த நிலையில், பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அறையைக் காலி செய்யுமாறு உரிமையாளர் ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது, அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதால் மிரண்டு போன உரிமையாளர் உடனே காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இதை அறிந்த புஷ்பக் கிருஷ்ணா சில நாட்களாக வாடகை அறைக்கு வராமல் பதுங்கி இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர், அறையின் பூட்டை உடைத்துத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு வாளிக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள், அறை முழுவதும் சிதறிக் கிடந்த காகிதங்கள், அருகில் ஒரு பிரிண்டர் கிடந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஹோட்டல் ரூமுக்குள் செல்லும் முன்.. இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. விசாரணையில் பகீர்.. என்ன நடந்தது?

அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாத்தோடா காவல்நிலைய போலீசார் அறைக்குள் சென்று சோதனையிட்டபோது, இருபுறமும் அச்சிடப்பட்டிருந்த 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், ஒருபுறம் மட்டும் அச்சிடப்பட்ட 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளும் சிக்கின. பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். மொத்தம் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் சிக்கிய நிலையில், அவற்றை அச்சிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் மட்டும் மாயமாகியிருந்தார். போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், புஷ்பக் மும்பையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், அவரைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோட்டுகள் எதற்காக அச்சிடப்பட்டன? ஏற்கெனவே சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளனவா? இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?. வாடகைத் தகராறில் தொடங்கி, கள்ள நோட்டு விவகாரமாக மாறியுள்ள இந்தச் சம்பவத்தில், தலைமறைவான நபர் பிடிபட்ட பிறகே மேலும் பல விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

”’நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” – அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

Next Post

`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ – தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ – தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!

`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ - தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In