Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ – தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ – தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேலூர் காட்பாடியில் உள்ள தனது வீட்டில் தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆட்சியில் எல்லாமே மர்மமாக இருக்கிறது. வெளிப்படையாக எந்தச் செயல்களுமே நடைபெறுவதில்லை. மழைக்கு முன்பு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த அரசு அதைச் செய்யவில்லை. எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும். மின்சாரம் வாங்குவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. நம்மிடம் போதிய அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி இருந்தும்கூட `ஏன் வெளியில் இருந்து வாங்குகிறோம்?’ என்று இவர்கள் கூறுவதில்லை. இது ஒரு மர்மமான அரசாங்கம்.

நமக்கு கண்ணும், காதுமாக இருப்பது பத்திரிகைச் செய்திகள்தான். ஒருநாள் தவறாமல் 8 பக்க பத்திரிகைச் செய்திகளில் 80 கொலைச் செய்திகள் இருக்கின்றன. சட்டம் – ஒழுங்கு கெட்டுப்போயிருக்கிறது. காவல்துறையினரிடம் சரியான அணுகுமுறை இல்லையா? என்று தெரியவில்லை. அதேபோல, ஆளுங்கட்சியினர்தான் அதிகமாக போதைப்பொருள்கள் விற்பனைச் செய்வதாக செய்திகள் வருகிறது. இதற்கெல்லாம் விளக்கம் வேண்டும்.

துரைமுருகன்

துரைமுருகன்

காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது. அது பாவம், செத்துப்போன கட்சி. ஆரம்பத்திலிருந்து எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்தது நாங்கள்தான். அன்றைக்கு எல்லாம் இவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கவே இல்லை. வேண்டுமானால் பந்தயம் கட்டச் சொல்லுங்கள். காங்கிரஸ் எல்லாம் நமத்துபோன சமாச்சாரம். அந்தக் கட்சியைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. இந்த ஜென்மத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது’’ என்றவரிடம், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவது பற்றி நிருபர்கள் கேட்டபோது, “ஒருவன் இளநீர் கடை வைத்து நன்றாக விற்பனையானால் அதேபோன்று மற்றவர்களும் கடை வைப்பார்கள். அதேபோன்ற கேஸ்தான் இந்த நடிகர்கள். இதெல்லாம் நிற்காது. எல்லோராலும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது’’ என்றார் துரைமுருகன்.



.

Previous Post

வாடகை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்.. ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நாக்பூரில் பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மழைக்கு முன் – மழைக்குப் பின்; வறண்ட நொய்யலில் புதுவெள்ளம்.. தன்னார்வலர்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் | Noyyal River Gets Fresh Flow After Northeast Monsoon Rains in Coimbatore

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மழைக்கு முன் – மழைக்குப் பின்; வறண்ட நொய்யலில் புதுவெள்ளம்.. தன்னார்வலர்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் | Noyyal River Gets Fresh Flow After Northeast Monsoon Rains in Coimbatore

மழைக்கு முன் - மழைக்குப் பின்; வறண்ட நொய்யலில் புதுவெள்ளம்.. தன்னார்வலர்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் | Noyyal River Gets Fresh Flow After Northeast Monsoon Rains in Coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In