Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' – தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' – தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேற்று சென்னை செம்மஞ்சேரியில் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழகம் முழுவதுமிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 2500 க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். ‘தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?’ எனும் பேச்சு எழுந்திருக்கும் நிலையில் கொட்டும் மழையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஒரு விசிட் அடித்திருந்தோம். அதில் நமக்கு ஹைலைட்ஸாக தெரிந்தவை இங்கே.

மகளிர் அணி கூட்டம்
மகளிர் அணி கூட்டம்

கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்திருந்தது. அந்தக் கூட்டத்தில்தான் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. நற்பணி இயக்கமாக மாறிய பிறகு முதல் கூட்டமே மகளிர் அணி கூட்டம்தான்.

நற்பணி இயக்கத்தின் முதல் கூட்டம் என்பதால் ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் நல்ல நாளாக பார்த்துதான் இந்தக் கூட்டத்துக்கு தேதியே குறிக்கப்பட்டிருக்கிறது. ‘தலைவர் சிவபக்தர். அதனால்தான் எப்போது பேசும்போதும் ஓம்நவச்சிவாய என பாசிட்டிவிட்டி பரவ பேசுவார். அந்த செண்டிமெண்ட்டில்தான் சிவனுக்கு உகந்த நாளில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம்’ என்கின்றனர் நற்பணி இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலர்.

மகளிர் அணி கூட்டம்
மகளிர் அணி கூட்டம்

ஆன்மிகமயமாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கையும் பரிசாக கொடுத்திருந்தார் தனுஷ். வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பாமல் செண்டிமெண்ட்டாக காமாட்சி விளக்கை பரிசாக கொடுத்து அனுப்பியதில் நிர்வாகிகளும் ஹேப்பி. ஆனால், கூடவே ஒரு சர்ச்சையும் எழுந்தது. பரிசாக கொடுக்கப்பட்ட அந்த காமாட்சி விளக்கில் குட்டியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதை வைத்து பல தியரிக்கள் சமுகவலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

திட்டமிட்டே தாமரை சின்னம் பொறித்து வாங்கப்பட்டதா என தனுஷூக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் கேட்டால், ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை’ என ஜகா வாங்குகின்றனர்.

சமீபமாக எந்த நடிகரின் ரசிகர் மன்றக் கூட்டம் நடந்தாலும் அங்கே ‘விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் செய்த ரோலை இங்கே யார் செய்கிறார்?’ எனப் பார்ப்பது வழக்கமாகியிருக்கிறது. அது சமூகவலைதளங்களிலும் வைரலாகிறது. அந்தவிதத்தில் தனுஷின் புஸ்ஸி ஆனந்தாக இயக்குநர் சுப்ரமணியம் சிவாவும், ராஜா என்பவரும் இருப்பதை பார்க்க முடிகிறது. சுப்ரமணியம் சிவா நற்பணி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு எல்லாவற்றையும் மேற்பார்வை பார்க்கிறார். ராஜா என்பவர் தனுஶின் மேக்கப் மேன். நீண்ட நாட்களாக அவருடன் பயணிப்பவர்.

2,500+ hearts. One beautiful moment. A bond beyond words! ❤️

DHANUSH NARPANI IYAKKAM’S MAGALIR ANI SANDHIPPU 2026.

A celebration of love and gratitude, with silver vilakkus gifted to every woman who attended! ✨❤️@dhanushkraja #DhanushNarpaniIyakkam #MagalirAni #Dhanush pic.twitter.com/ygfOkemGiy

— Dhanush Narpani Iyakkam (@Dnarpaniiyakkam) October 25, 2026

நற்பணி இயக்கத்தின் செயலாளர் இவர்தான். ‘ஏப்பா வெள்ளைச் சட்டை மரத்து மேல ஏறாத…ஸ்பீக்கர் மேல பாயாத…’ என புஸ்ஸி ஆனந்த் செய்யும் அத்தனை வேலைகளையும் ராஜாதான் செய்கிறார். நேற்றும் சுப்ரமணியம் சிவா விழா ஏற்பாட்டில் கவனமாக இருக்க, ரசிகர்களையும் நிர்வாகிகளையும் ஒழுங்குப்படுத்தும் வேலையை ராஜாதான் கையில் எடுத்திருந்தார். சில மாவட்டத் தலைவர்களே நிகழ்வுக்கு தாமதமாக வந்திருந்தனர். இன்னும் சில மாவட்டத் தலைவர்கள் மகளிரணி கூட்டத்துக்கு வேன் அமர்த்தி தனியாக ரசிகர்களையும் அழைத்து வந்திருந்தனர். இதையெல்லாம் கண்டு சுப்ரமணியம் சிவாவும் ராஜாவும் பிரஷர் ஏறி டென்ஶன் ஆகி கத்துகையில் ஒரு நிமிடம் ப்ளாஷ் கட்டில் புஸ்ஸி ஆனந்த் கண்முன் வந்து சென்றார்.

மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் எல்லா நிர்வாகிகளும் 9 மணிக்கே ஆஜராகி விட வேண்டுமென தகவல் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தனுஷ் மதியம் இரண்டரை மணி அளவில்தான் நிகழ்ச்சி நடந்த கல்லூரிக்குள்ளேயே நுழைந்தார். தாமதமானாலும் வந்திருந்த ரசிகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெஜ், நான் வெஜ் என இருதரப்பையும் கவனித்திருந்தனர். நான் வெஜ் பக்கம் சென்றவர்களுக்குதான் பிரியாணியில் பீஸ் இல்லாததால் கொஞ்சம் மனக்கஷ்டம். ‘அடுத்த கூட்டத்துக்கு நல்ல மாஸ்டரா பிடிக்க சொல்லுங்கண்ணே….’ என மாவட்டத் தலைவர்களிடம் நிர்வாகிகள் Feed Back கொடுத்திருந்தனர்.

மகளிர் அணி கூட்டம்
மகளிர் அணி கூட்டம்

குஸ்கா சாப்பிட்ட சங்கடத்தில் இருந்த நிர்வாகிகளை மேடையேறிய உடனேயே ‘எம்பாட்டன் சாமி வரும்…’ என இட்லி கடை பாடலைப் பாடி குஷிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். ஒவ்வொரு பெண் நிர்வாகியாக மேடையேற காமாட்சி விளக்கை கையில் கொடுத்து, ‘நல்லா படிச்சு முன்னேறணும்…’ ‘பெண்கள்னா தைரியமா இருக்கணும்…’ ‘நம்பிக்கையா முயற்சி பண்ணுங்க’ என மோட்டிவேஷன் பன்ச்களை அள்ளிவிட்டு வாழ்த்தும் சொல்லியிருக்கிறார். 2500 பேருடனும் தனித்தனியாக 4 மணி நேரத்தில் போட்டோ ஷூட்டை முடித்துவிட்டு கிளம்பினார். அவர் வெளியேறுகையில் ‘சார் அரசியலுக்கு வர்றீங்களா…’ என மைக் போட, ‘ஹேப்பி…தீபாவளி’ எனப் பதில் கூறி அது இது எது நிகழ்ச்சியின் ‘மாத்தி யோசி’ ரவுண்டை நியாபகப்படுத்திவிட்டு சென்றார்.

வெள்ளி காமாட்சி விளக்கு பரிசு, சிக்கன் பிரியாணி விருந்து, நிகழ்ச்சி ஏற்பாடுகள், இதுபோக நிர்வாகிகள் வெளி மாவட்டங்களிலிருந்து வேன் பிடித்து அழைத்து வந்த செலவு என எல்லாவற்றையும் சேர்த்தால் தோராயமாக ஒன்றரை கோடி வரை செலவாகியிருக்குமென முக்கிய நிர்வாகிகள் கால்குலேட்டரை தட்டுகின்றனர்.

தனுஷ் இவ்வளவு செலவு செய்து படோபடமாக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துவதைப் பற்றி உளவுத்துறையும் மிகக் கவனமாக களத்தில் சுற்றி தகவல்களை சேகரித்து மேலிடத்துக்கு நோட் போட்டிருக்கின்றனர்.

உங்க ஆளு அரசியலுக்கு வருவாரா என மாவட்டத் தலைவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம். ‘நடக்குறதையெல்லாம் பார்த்தா வந்துடுவாரோன்னுதான் தோணுது. லோக்கல்ல தவெக மாவட்டச் செயலாளர்களே, ‘எங்க ஆளும் 15 வருசத்துக்கு முன்னாடி இப்படித்தான் மக்கள் இயக்கமா மாத்தி போட்டோ ஷூட் நிர்வாகிகள் கூட்டம்னு ஆரம்பிச்சாரு’னு எங்கரேஜ் பண்றாங்க, பார்க்கலாம்’ என்கின்றனர்.

தனுஷ் ரசிகர்களை தேற்றும் தவெக நிர்வாகிகள்! (நல்ல மனசு சார் உங்களுக்கு..)





.

Previous Post

Kanimozhi Santosh has remarked that they would welcome Dhanush if he were to enter politics – ’தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம்’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கருத்து!

Next Post

கர்நாடகா: `கன்னடர்களுக்கே முன்னுரிமை' தனியார் நிறுவனங்களுக்குத் முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

கர்நாடகா: `கன்னடர்களுக்கே முன்னுரிமை' தனியார் நிறுவனங்களுக்குத் முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In