Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" – என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" – என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “காங்கிரஸ் கட்சியைப் பொருத்தமட்டிலும் காங்கிரஸ் கட்சியினுடைய கனவு என்பது காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான்.

இதனை 1989ஆம் ஆண்டுகளில் தீவிரமாக முயற்சித்தோம். அதன்பின் கிடையாது. எல்லா கட்சிகளுக்கும் ஒரு கனவு இருக்கும் காங்கிரஸ் கட்சியுடைய கனவு என்பது காமராஜருடைய ஆட்சி என்பதுதான்.

1989க்கு பின் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைத்து எவ்வளவு சீட்டு குறைந்து கொண்டு இருந்தது எனத் தெரியும். ராஜேஷ்குமாரைப் பொறுத்தமட்டிலும் விஜய் அவர்கள் தலைமையில் இருக்கக்கூடிய தவெக கூட்டணியில் அமைச்சராக உள்ளார்.

காங்கிரஸ் கட்சி – தவெக கூட்டணி என்பது உள்ளார்ந்த கூட்டணி மதிப்பமிக்க கூட்டணி; சகோதரர்களுக்கான கூட்டணி; விஜய்க்கும் ராகுல்காந்திக்கும் உறவு என்பது சகோதரத்துவமான உறவு இந்த உறவு நீண்ட நாள் நீடிக்கும்.

இருவருக்குமானது கொள்கை சார்ந்த கூட்டணி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்பது நீண்ட கால இருக்கப் போகின்ற கூட்டணி இந்தக் கூட்டணி மந்திர சபையில் காங்கிரஸ் கட்சி பங்கு வைக்கிறது. இரண்டு அமைச்சர் வைத்திருக்கிறோம் எங்களைப் பொறுத்தமட்டிலும் அடுத்தடுத்து எங்களது பலத்தைக் கூட்டுவோம். அதற்கு ஏற்ப மரியாதை கிடைக்கும்” என்றார்.

திருமாவளவன்
திருமாவளவன்

திருமாவளவனை முதல்வர் ஆக்குவோம் என முயற்சி நடந்ததாக தினகரன் கூறியது தொடர்பான கேள்விக்கு, “அண்ணன் டிடிவி தினகரன் நேரத்திற்கு ஏற்ப பேசுவார். அண்ணன் திருமாவளவன் அவர்களைப் பொருத்தமட்டிலும் இவ்வளவு கொச்சைப்படுத்த வேண்டிய நபர் கிடையாது.

பாஜகவுடன் சேர்ந்து அண்ணன் திருமாவளவன் மந்திரி ஆக வேண்டும் எனச் சொல்கிறீர்களா? அவர் பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக மிகத் தெளிவான நிலையில் உள்ளார். பாமகவுக்கு எதிரான நிலையில் உள்ளார். அனைத்தையும் சேர்த்து கூட்டணி சேர்ப்போம் என்று சொல்லிவிடுவாரா?

டிடிவி தினகரனிடம் உள்ள ஒற்றை எம்எல்ஏ-வும் காப்பாற்ற முடியாமல் தவெகவிற்கு லெட்டர் கொடுத்து விட்டார் இதையெல்லாம் ஒரு குழப்பத்தை உருவாக்குவதற்கானது இதையெல்லாம் கடந்து வந்து விட்டோம்.

பாஜகவைப் பொருத்தமட்டிலும் பல வகையில் தமிழகத்தில் குட்டையைக் குழப்புவதற்காக  முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். பழனிச்சாமியை தினகரனைக் கையில் வைத்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் பி பிளான் அது. பழனிச்சாமியும் தினகரனையும் மக்கள்  நிராகரித்து விட்டார்கள்

தற்போது C பிளான் ஆப்ரேட் செய்கிறார்கள். அண்ணாமலைக்குப் புது முகமூடி கொடுத்து கட்சியை விட்டு வெளியே சென்று என்.ஜி.ஒ போன்று இயக்கம் தொடங்கியிருக்கிறார். ஆனால் அண்ணாமலை பேசும் பேச்சு எல்லாம் பாஜக பேச்சு பாஜக ஆதரவான பேச்சு குழப்பமான பேச்சு.

தற்போது C பிளானில் நடிகரை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் இருந்து ஒரு நடிகர் ரசிகர் மன்றக் கூட்டம் போட்டு கட்சியில் சேர போகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதையெல்லாம் தொடர்புபடுத்திப் பார்த்தால் பிளான் A அதிமுக – பாஜக கூட்டணி, பிளான்B அண்ணாமலையைத் தனியாக கட்சி ஆரம்பிக்க வைத்தது, இப்போது பிளான் C புதிய நடிகரை வைத்து கட்சி ஆரம்பிக்க வைப்பது என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் ஒரு அரசியல் குழப்பத்தை உருவாக்குவதற்கான எல்லா நிலையையும் எடுத்து வருகிறார்கள்.

டெல்லியில் இருந்து ஆபரேஷனாகி ரிமோட் கண்ட்ரோல் டெல்லியில் உள்ளது அமித்ஷா அவர்களிடம் இருக்கிறது.

திட்டம் தீட்டிய தனுஷ்? களத்தில் இறங்கிய நிர்வாகிகள் – மகளிரணி சந்திப்பின் பின்னணி என்ன?

ஆப்ரேசன் Dயை பொருத்தமட்டிலும் பாஜககாரர்களும் இந்தக் குழப்ப விளைவிக்கிறார்கள். அதிமுக அடிப்படையில் சினிமா தொடர்புடைய கட்சி. அதனுடைய டிஎன்ஏ சினிமாவுடன் தொடர்புடையது. அந்த வாக்குகளை எடுக்க வேண்டுமென பாஜக பல காலம் முயற்சித்தது.

ரஜினிகாந்த்தை கட்சி ஆரம்பிக்க வைக்க முயற்சித்தார்கள், அவர் ஆரம்பிக்கவில்லை. பாஜகவும் ஆர்எஸ்எஸும் அதிமுகவின் இடத்தைப் பிடிப்பதற்காகப் பல வருடங்களாக முயற்சி செய்தார்கள். தயவு செய்து குழப்பி விடாதீர்கள்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

தமிழ்நாட்டில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைந்திருக்கிறது. இதில் காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் விசிகவும் மதச்சார்பற்றக் கொள்கைக்கும் சமூக நீதிக் கொள்கைக்காகவும் பல வருடங்கள் போராடியவர்கள். இதுதான் எங்களுடைய சாதனை.

அதுதான் தவெக என்ற கட்சி விஜய் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி 3 வருட கட்சி மிக இளமையான கட்சி. அந்தக் கட்சியோடு எங்கள் கூட்டணி உள்ளது. இதன் கூட்டணி பலமாக உள்ளது மதச்சார்பற்றக் கூட்டணி நீண்ட நாள் ஆட்சி செய்யும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்றார்.

Dhanush: ‘அவர் இறங்குனா CMதான்!’ – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்



.

Previous Post

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | Rainwater entered homes due to heavy rainfall in Coimbatore

Next Post

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்… இந்தியா – ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்… இந்தியா – ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடக்கம்... இந்தியா - ரஷ்யா ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In